நடிகை கௌதமியின் கணவரை பார்த்திருக்கீறீர்களா? முதல் முறையாக வெளியான அவரது திருமண புகைப்படம்!
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை கௌதமி. 1983 ஆம் ஆண்டு 'வசந்தமே வருக', படத்தின் மூலம் சுப்புலக்ஷ்மி என்கிற கதாபாத்திரத்தில் துணை நடிகையாக தமிழில் அறிமுகமான இவர், பின் 1987 தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக மாறினார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை கௌதமி. 1983 ஆம் ஆண்டு 'வசந்தமே வருக', படத்தின் மூலம் சுப்புலக்ஷ்மி என்கிற கதாபாத்திரத்தில் துணை நடிகையாக தமிழில் அறிமுகமான இவர், பின் 1987 தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக மாறினார்.
நடிகை கௌதமிக்கு தமிழில் சிறந்த அறிமுக படமாக அமைந்தது 'குருசிஷ்யன்' திரைப்படம். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக இவர் நடித்தார். முதல் படத்திலேயே தன்னுடைய அழகால் ரசிகர்கள் மனதை வென்றார். மேலும், இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி பெறவே, பல இயக்குனர்கள் இவரை புக் செய்ய போட்டி போட்டனர்.
இந்த படத்தை தொடர்ந்து, எங்க ஊரு காவல்காரன், ரத்ததானம், நம்ம ஊரு நாயகன், உள்ளிட்ட தமிழ் படங்களில் வரிசையாக நடித்தார். அதே போல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற மொழி படங்களிலும் இவருக்கு வாய்ப்புகள் வந்தன.
கிட்ட திட்ட 75 படங்கள் நடித்த பின், சந்தீப் பாத்தியா என்பவரை திருமணம் செய்து கொண்டு, திரையுலகை விட்டு விலகினார். ஆனால் திருமணமான ஒரு சில வருடங்களிலேயே சந்தீப் பாத்தியாவிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். மகள் சுப்பு லட்சுமியுடன் சென்னை வந்த கௌதமி, திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காததால், சின்னத்திரை சீரியல்களில் நடிக்க துவங்கினார்.
அந்த வகையில் இந்திரா, அபிராமி, அன்புடன், உள்ளிட்ட சீரியல்களிலும் டான்ஸ் ஜோடி டான்ஸ் போன்ற ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக இருந்திருக்கிறார் கௌதமி.
சில காலம் உடல் நலம் இன்றி இருந்த இவரை, நடிகர் கமலஹாசன் உறுதுணையாக இருந்து பார்த்துக்கொண்டார். பின் இருவரும் கிட்ட தட்ட 10 ஆண்டுகள் வரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்தனர். ஒரு சில காரணங்களுக்காகவும், மகளின் வருங்காலம் கருதியும் கமல்ஹாசனை விட்டு விலகுவதாக ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார் கௌதமி என்பது நாம் அனைவரும் அறிந்தது தான்.
நடிகை கௌதமி பற்றி தெரிந்த அளவிற்கு, அவருடைய முதல் கணவர் பற்றி யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதே போல் அவருடைய புகைப்படங்கள் கண்ணில் படுவது அரிது தான். இந்நிலையில் தற்போது நடிகை கௌதமி - சந்தீப் பாத்தியா திருமணத்தின் போது, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நேரில் சென்று வாழ்த்திய புகைப்படம் முதல் முறையாக வெளியாகி உள்ளது.
அந்த அறிய புகைப்படம் இதோ...