actress geetha kapoor death in hospital

'பாகியா' என்ற இந்தி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை கீதா கபூர். தற்போது 57 வயதாகும் இவர், 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு கீதா கபூரை அவரது மகன் ராஜா சிகிச்சைக்காக மும்பை கோரேகாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு வந்த சேர்ந்தார். பின் மருத்துவ மனைக்கு கட்டணம் கூட செலுத்தாமல் அங்கிருந்து சென்றுவிட்டார். 

விமான பணிப்பெண்ணாக வேலை செய்து வரும், கீதா கபூரின் மகள் பூஜாவும் இதுவரை ஒரு முறை கூட தன்னுடைய தாயை வந்து பார்க்கவில்லை. பிள்ளைகளால் கைவிடப்பட்டு மருத்துவ மனையில் இருந்த நடிகைக்கு திரைத்துறையை சேர்ந்த சிலர் உதவிகள் செய்து வந்தனர். 

பின் இவரை தயாரிப்பாளர் அசோக் என்பவர் மீட்டு முதியோர் இல்லத்தில் சேர்த்ததுடன் இவரை கவனித்துக்கொண்டார். 

இந்நிலையில் நேற்று இவருக்கு உடல் நிலை மிகவும் மோசமானதை தொடந்து, மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் சிகிச்சை பலனின்றி கீதா கபூர் மரணமடைந்தார். இதுகுறித்து தயாரிப்பாளர் அசோக் கூறுகையில், எவ்வளவோ முயன்றும் அவரை காப்பாற்ற முடியவில்லை. தன் மகன், மகள் வருவார்களா என்ற ஏக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்துள்ளது என்று கூறியுள்ளார்.