தெலுங்கில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் ஸ்டார் மா பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து ஒரு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

காரணம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பத்திரிகையாளரான ஸ்வேதா ரெட்டி என்பவர் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மீது பாலியல் புகார் கொடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நடிகை காயத்ரி குப்தா என்பவரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான ரவிகாந்த் ரகு மற்றும் எச் ஆர் ஒருவர் மீது புகார் தெரிவித்து உள்ளார்

இது குறித்து ஜூலை14-ஆம் தேதி பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டுள்ள புகாரில் காயத்ரி தெரிவித்துள்ளது. என்னவென்றால், "என்னை பிக்பாஸ் ஷோவில் கலந்து கொள்ள ரவிகாந்த் மற்றும் எஸ் ஆர் ஒருவர் போன் செய்து அழைத்தனர். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை உறுதி செய்யும் விதமாக மும்பையிலிருந்து அபிஷேக் என்பவர் என்னிடம் பேசினார். பின்னர் manikonda என்ற இடத்தில் என்னை நேரில் சந்தித்தார். பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது. அதற்கான தொகையையும் பேசப்பட்டு முடிவு செய்யப்பட்டது.

பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று முடியும் வரை அந்த 100 நாட்களில் வேறு எந்த ஒரு பிராஜக்ட்டிலும் ஒப்பந்தமாகக் கூடாது என கண்டிசன் போட்டனர்.நானும் என்னை தேடி வந்த இரண்டு வாய்ப்புகளை தவிர்த்து விட்டேன்.பின்னர் 100 நாட்களும் மொபைல் போனை பயன்படுத்த கூடாது என தெரிவித்தனர். இதற்கு அடுத்த கேள்வியாக அந்த 100 நாட்களும் செக்ஸ் இல்லாமல் எப்படி இருப்பீங்க ? என்ற கேள்வியை என்னிடம் கேட்டார்.

எதற்காக இந்த தேவையில்லாத கேள்வி என்னிடம் கேட்க வேண்டும் என தெரியவில்லை. இதற்கு நான் அவர்களிடம் சற்று கோபப்பட்டேன். பின்னர் ஜூன் 25ஆம் தேதி ரவிகாந்த் எனக்கு போன் செய்து பிக்பாஸ் ஷோவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு இல்லை என தெரிவித்தார். ஏற்கனவே என்னுடைய உடல் நலத்தைப் பற்றியும் என்னுடைய மற்ற ஒப்பந்தம் பற்றியும் மிகத் தெளிவாக அவர்களிடம் தெரிவித்த பின்னரே ஒப்பந்தம் போடப்பட்டது. இருந்தபோதிலும் எந்த காரணத்திற்காக டெர்மினேட் செய்தார்கள் என்பது தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ரவிகாந்த் மற்றும் அபிஷேக் மீது 354 ஏ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர்கள் இருவர் மீதும் ஏற்கனவே ஸ்வேதா புகார் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.