அச்சு அசலாக அம்மா தேவதர்ஷினி போலவே இருக்கும் மகள்... சோசியல் மீடியாவில் வைரலாகும் ஜாலி டூர் போட்டோ...!
சற்று வளர்ந்து பெரிய பெண்ணாக மாறியுள்ள நியத்தி, அப்படியே அச்சு, அசலாக தேவதர்ஷினி போலவே இருக்கிறார்.
டி.வி. தொகுப்பாளினி, சீரியல் நடிகை என படிப்படியாக உயர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்திருப்பவர் தேவதர்ஷினி. அதிலும் ''மர்மதேசம்'' தொடர் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. இதையடுத்து ''பார்த்திபன் கனவு'' படத்தில் விவேக்கின் மனைவியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். 'சின்ன பாப்பா பெரிய பாப்பா' நகைச்சுவைத் தொடரில் பார்வையாளர்களின் விருப்பத்திற்குரிய நடிகையானார். தேவதர்ஷினி என்றாலே கலகலப்பான பாத்திரமாக ரசிகர்களின் மனதில் பதிந்து போனது.
ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான ''காஞ்சனா'' திரைப்படத்தில் கோவை சரளாவோடு தேவதர்ஷினி இணைந்து செய்த காமெடி செம்ம வொர்க்-அவுட் ஆனது. அதன் பின்னர் ''காஞ்சனா - 2''விலும் பட்டையைக் கிளப்பினர். இப்போது அக்கா, அண்ணி கேரக்டர் என்றாலே கூப்பிடு தேவதர்ஷினியை எனும் அளவிற்கு திரையுலகில் பெயர் எடுத்துவிட்டார்.
இவரது மகள் நித்யா, சமீபத்தில் வெளியான '96' படத்தில் இவரது சின்ன வயது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஒரே படத்தில் அம்மாவை விட அதிக புகழ் பெற்ற நியத்தி, பெற்றோருடன் டூர் சென்றுள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சற்று வளர்ந்து பெரிய பெண்ணாக மாறியுள்ள நியத்தி, அப்படியே அச்சு, அசலாக தேவதர்ஷினி போலவே இருக்கிறார்.
பார்ப்பதற்கு மகள் போல் இல்லாமல், தேவதர்ஷினியின் இரட்டை சகோதரி போல் இருக்கிறார். அக்கா, தங்கை போல் இருக்கும் அம்மா, மகளின் போட்டோக்கள் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது.