இந்த ஒரே காரணத்துக்காக பறிக்கப்படும் தமிழ் நடிகைகளின் வாய்ப்புகள்! கோபத்தில் கொந்தளித்த நடிகை சித்ரா!

சீரியல் தொடர்களில் நடிக்க நடிகைகள் கருப்பாக இருந்தாலும் கலையாக இருக்க வேண்டும் என்கிற காலம் மாறிப்போய், தற்போது  கலராக இருந்தால் மட்டும் போதும், மொழி தெரியாவிட்டாலும் அவர்களுக்கு டப்பிங் குரல் கொடுத்து நடிக்க வைத்து விடலாம் என நினைக்கின்றனர் சீரியல் தொடர் இயக்குனர்கள்.
 
actress chitra about serial chance

அந்த வகையில் சமீப காலமாக தமிழ் சீரியல்களில் கேரளா மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த நடிகைகள் அதிக அளவில் நடித்து வருகின்றனர்.

actress chitra about serial chance

இதுகுறித்து மிகவும் கோபமாக பேசியுள்ளார் 'நாச்சியார்',  பாண்டியன்  ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சீரியல் தொடர்களில் நடித்துவரும் நடிகை சித்ரா.

இது குறித்து வார இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள சித்ரா.  பல சீரியல்களில் தமிழ் பெண்களுக்கு வாய்ப்புகள் பறிக்கப்படுகின்றன. கேரளா, கர்நாடகா, என வேறு மாநில பெண்கள் வெள்ளையாக இருக்கின்றனர் என்ற ஒரே காரணத்திற்காக, தமிழ் சீரியல்களில் அவர்களை ஒப்பந்தம் செய்கின்றனர்.

actress chitra about serial chance

ஆனால் நான் ரொம்ப கலர் கிடையாது,  டஸ்கி கலர் தான் ஆனால் இதுவும் அழகு தானே. நம்ம ஆளுங்க ஏன் வெள்ளையா இருக்குற பெண்களுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என  தெரிவியவில்லை என்று கூறியுள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios