நடிகை கேத்ரின் தெரசா மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர், இவர் திரைப்படத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார், இதனை தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார், மெட்ராஸ் திரைப்படத்திற்குப் பிறகு கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார், சமீபத்தில் நடித்த கலகலப்பு 2 திரைப்படத்திலும் அதீத கவர்ச்சி காட்டி நடித்திருந்தார். அம்மணிக்கு தமிழை விட தெலுங்கில் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். 

பட வாய்ப்பிற்காக சரமாரியாக கவர்ச்சி போட்டோ ஷூட்களை பதிவிட்டு வரும் கேத்ரின் தெரசாவிற்கு கல்யாணம் என்ற தகவல் ரசிகர்களுக்கு ஹார்ட் அட்டாக்கை வரவழைத்துவிட்டது. சமீபத்தில் தான் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் இந்த தகவலை கேத்ரின் தெரசா  மறுத்துள்ளார். 

மேலும் சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில் தனக்கு வரப்போகும் மாப்பிள்ளை எப்படியிருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதில் “என்னை சந்திக்கிறவர்கள் திருமணம் எப்போதுஎன்று கேட்கிறார்கள். மணமகன் கிடைத்ததும் திருமணம் செய்து கொள்வேன். பொருத்தமான மணமகனுக்காக காத்து இருக்கிறேன். திருமணத்துக்கு முன்கூட்டியே திட்டமிடுவது எனக்கு பிடிக்காது. எனது வீட்டிலும் சீக்கிரம் திருமணம்செய்து கொள்ளும்படி வற்புறுத்துகிறார்கள். 

காதல் மீது எனக்கு வெறுப்பு இல்லை. அதே நேரம் காதலிக்க ஏற்ற மாதிரியான ஆணை எனது வாழ்க்கையில் இதுவரை சந்திக்கவில்லை. காதல் என்பது மனதோடு சம்பந்தப்பட்டது. அதை விளக்குவது கஷ்டம். நான் காதல் திருமணம் செய்துகொள்வேனா? அல்லது பெற்றோர்கள் பார்க்கும் மாப்பிள்ளையை மணப்பேனா? என்பதை இப்போதே சொல்ல முடியாது எனக் கூறியிருந்தார்.