actress bindukosh sad story



80களில் பல முன்னணி நடிகர்கள் படத்தில் காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் மூத்த நடிகை பிந்துகோஷ். இவர் மருத்துவ உதவிக்கு கூட பணம் இல்லாமல் மிகவும் சிரமப்படுவதாக ஒரு வார இதழ் சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த செய்தியை அறிந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான நடிகர் விஷால் உடனடியா தனது தேவி அறக்கட்டளை மூலம்  நிதி உதவியாக ரூ.5 ஆயிரம் வழங்கியுள்ளார்.

அதனை தொடந்து மாதந்தோறும் ரூ.2500  உதவித்தொகை வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளார். 

நடிகை பிந்துகோஷ்  நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இல்லாத காரணத்தால் அவரை சங்கத்தில் இணைத்து மேற்க்கொண்டு உதவிகள் வழங்கிடவும் ஏற்பாடு செயாப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார் விஷால்.

இன்று அதற்கான உதவித்தொகையை  விஷால் நற்பணி இயக்கத்தின் செயலாளர் ஹரிகிருஷ்ணன் நடிகை பிந்துகோஷை நேரில் சந்தித்து வழங்கினார்.