ஆதரவற்றோர்களுடன் ஆட்டம்... பாட்டம்... என பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடிய நடிகை பூமிகா! வைரலாகும் வீடியோ!
நடிகை பூமிகா தன்னுடைய 44 ஆவது பிறந்தநாளை ஆதரவற்றோர்களுடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார் இது குறித்த வீடியோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘பத்ரி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பூமிகா, இந்த அப்படத்தை தொடர்ந்து ரோஜா கூட்டம், ஜில்லுனு ஒரு காதல், என தற்போது வரை ரசிகர்கள் மனதை விட்டு நீங்காத பல படங்களில் அடுத்தடுத்து நடித்து பிரபலமானவர். திருமணம் ஆகி குழந்தை பெற்ற பிறகும் தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் அதிகம் நடித்து வரும் இவர், தமிழில் கடைசியாக 2019ம் ஆண்டு வெளியான கொலையுதிர் காலம் படத்தில் நடித்திருந்தார்.
சிம்ரன், லைலா போன்ற நடிகைகள் கூட சரியான வாய்ப்பு கிடைக்காமல் திண்டாடி வரும் நிலையில், பூமிகா தரமான குணச்சித்திர வேடங்களை தேர்வு செய்து நடிப்பதே, இவரது வெற்றிக்கு காரணம். அதே போல் 40 வயதை கடந்து விட்ட போதிலும், உடல்பயிற்சி மூலம் தன்னுடைய எடை மற்றும் அழகை 25 வயது நடிகை போல், மெயின்டெயின் செய்து வரும் பூமிகா நேற்று தன்னுடைய 44 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.
ஊட்டியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில், கேக் வெட்டி, உணவுகள் வழங்கி... ஆட்டம், பாட்டம் என மனநிறைவோடு இந்த பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் பூமிகா. இதுகுறித்த வீடியோ ஒன்றை அவர் வெளியிட, ரசிகர்கள் பலர் அவருக்கு தங்களுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறிவருவதோடு, இவரது செயலை பாராட்டியும் வருகிறார்கள்.
நடிகை பூமிகா 'கண்ணை நம்பாதே' என்கிற தமிழ் படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடித்து வருகிறார். மேலும் சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது தன்னுடைய குடும்பத்தினர், மற்றும் விதவிதமான உடைகளில் போட்டோ ஷூட் செய்து... அந்த புகைப்படங்களையும் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.