நடிகை பாவனாவை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்ட பல்சர் சுனி, விஜேஷ் போலீசாரிடம் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளனர்.

நடிகை பாவனா

நடிகை பாவனா தனது காரில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு படப்பிடிப்பு முடித்துவிட்டு கொச்சியிலிருந்து திருச்சூருக்குத் திரும்பினார்.

அப்போது வேனில் வந்த மர்ம நபர்கள் அவரை காருடன் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து, அதை வீடியோ, புகைப்படமாக எடுத்தனர்.

இது குறித்து போலீசாரிடம் பாவனா அளித்த புகாரின் அடிப்படையில், பாவனாவின் கார் ஓட்டுநர் மார்ட்டின், பிரதீப், சலீம் உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். .

குற்றவாளிகள்

இந்தச் சம்பவத்தில் முக்கியக் குற்றவாளிகளாகக் கருதப்படும் பல்சர் சுனி மற்றும் வி.பி. விஜேஷ் ஆகியோரையும், போலீஸார் கடந்த ஒருவாரமாக தேடி வந்த நிலையில், எர்ணாகுளம் நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் சரணடைய வந்தபோது போலீசார் கைது செய்தனர்

பல்சர் சுனி, விஜேஷ் ஆகிய இருவரிடமும் தனித்தனியே போலீஸார் விசாரணை நடத்திய போது, பல திடுக்கிடும் தகவல் வந்ததாக கேரள நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த நாளேட்டில் கூறியிருப்பதாவது-

பாவனாவை மிரட்டி பணம் பறிக்கவே நாங்கள் அவரை, கடத்த திட்டம் போட்டோம். ஆனால் என் திட்டம் பாழாகிவிட்டது.

பவானாவை மிரட்டி பணம் பறித்து அதை வைத்து எனது காதலியுடன் உல்லாசமாக வாழ நினைத்தேன். பாவனாவிடமிருந்து ரூ. 50 லட்சம் பறிக்க நினைத்தேன்.

இந்தத் திட்டங்கள் குறித்து எனக்கு மட்டுமல்ல அவருடைய ஓட்டுநர் மாட்டினுக்கும் இது நன்கு தெரியும். நான் போலீசாரால் தேடப்படுகிறேன் என்று அறிந்த உடன் நான் பாவானாவை படம் பிடித்த செல்லை தூக்கி எறிந்துவிட்டேன் என்று தெரிவித்தார்.