பிரபல மலையாள நடிகை பாமாவின் திருமண நிச்சயதார்த்தம் நேற்று மிகவும் எளிமையான முறையில் நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில், பாமா மற்றும் மணமகன் அருணின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

நடிகை பாமா திருமணம் செய்துகொள்ள உள்ளவர் சிறுவயதில் இருந்தே பாமாவின் குடும்பத்திற்கு மிகவும் தெரிந்த நபர் என்றும், இந்த திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என இருவருக்கும் நெருங்கிய வட்டாரத்தை சேர்ந்தவர்கள் உறுதிசெய்துள்ளனர்.

மேலும் இவர்களுடைய திருமணம் விரைவில் நடைபெறும் என தெரிகிறது. ஆனால் திருமண தேதி இதுவரை வெளிப்படுத்தவில்லை. நடிகை பாமா கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான 'நிவேத்தியம்' என்கிற மலையாள படத்தில் அறிமுகமானவர். ஒருசில கன்னடம் மற்றும் தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். 

தமிழில் 'எல்லாம் அவன் செயல்', 'ராமானுஜம்', மற்றும் 'சேவர்கொடி' என்கிற 3 படங்களில் மட்டுமே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் திருமண புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.