பிரபல முன்னணி நடிகை ஒருவர் பெற்றோரின் திருமண புகைப்படத்தை வெளியிட்டு, அவர்களுடன் தற்போது இருக்க முடியவில்லை என்று, உருக்கமாக பதிவிட்டு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தமிழில் 'சித்திரம் பேசுதடி' படத்தின் மூலம், 2005 ஆம் ஆண்டு தமிழில் அறிமுகமானவர் நடிகை பாவனா. முதல் படமே, அவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததால், இதை தொடர்ந்து, வெய்யில், தீபாவளி, கூடல் நகர், அசல் போன்ற படங்களில் நடித்தார்.

தமிழை தவிர, மலையாளம், கன்னடம், போன்ற மொழி படங்களிலேயே அதிக கவனம் செலுத்தினார். திருமணத்தை தொடர்ந்தும், பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

அந்த வகையில், தமிழில் நடிகர் விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தின், கன்னடம் ரீமேக்கில் நடித்தார். இந்த படம் தெலுங்கை விட கன்னடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.இதை தொடர்ந்தும் மேலும் மூன்று கன்னட படங்கள் இவரின் கை வசம் உள்ளது. 

இந்நிலையில், இன்று நடிகை பாவனா... பெற்றோர் திருமண நாளை முன்னிட்டு, அவர்களின் திருமண புகைப்படங்களை வெளியிட்டு... மிகவும் உருக்கமாக பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், ''அப்பா அம்மா, உங்களை போன்ற சிறந்த பெற்றோர்கள் கிடைக்க நான் ஆசிர்வதிக்கப்பட்டவள். இதனை வார்த்தைகளால் சொல்லி விட முடியாது.   ஒரு மகளாக, உங்களை இருவரையும் சிறப்பானவர்களாக பார்க்கிறேன். திருமணநாள் வாழ்த்துகள். அப்பா நீங்கள் எங்களுடன் இல்லாமல் இருக்கலாம். எங்களுடைய அன்பு என்றும் உங்களை விட்ட விலகாது'' என்று தெரிவித்துள்ளார்.

இவர் பதிவிட்டுள்ள அந்த பதிவு இதோ...