actress bavana home jewells theift

தமிழில் பல படங்களில் துணை நடிகையாக நடித்து வருபவர் நடிகை பாவனா, இவருடைய வீட்டில் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போய் உள்ளதாக பாவனாவின் தம்பி சென்னை கொத்தவால்சாவடியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

நடிகர் கமலஹாசன் நடித்து வெளியான தூங்கவனம் உள்ளிட்ட சில படங்களில், துணை நடிகையாக நடித்துள்ளவர் நடிகை பாவனா. தற்போது லட்சுமி என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, தன்னுடைய குடும்பத்தினருடன் சொந்த ஊரான ஐதராபாத்திற்கு சென்று சில தினங்களுக்கு முன் தான் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் பாவனா வீட்டை சுத்தம் செய்யும்போது, கட்டிலுக்கு அடியில், அவருடைய தங்க மோதிரம் கிடந்துள்ளது. மோதிரத்தை எடுத்து நகைப் பெட்டியில் வைக்க பீரோவை திறந்த இவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பீரோவில் இருந்த 35 சவரன் தங்க நகை , 20 கிலோ வெள்ளிக் கட்டி மற்றும் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடுபோயிருப்பது தெரியவந்தது.

இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக பாவனாவின் தம்பி விக்கி, கொத்தவால்சாவடியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். வீடு பூட்டி இருந்த நிலையில், பீரோவை உடைக்காமல் இந்த திருட்டு எப்படி நடந்தது என்றும், இதனால் நடிகைக்கு தெரிந்த நபர்கள் தான் கள்ளச்சாவி கொண்டு நகையை திருட வாய்ப்புள்ளது என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.