கோலிவுட் திரையுலகில், முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை அசின். தமிழில் நடிகர் ஜெயம் ரவி நடித்த 'எம். குமரன் சன் ஆப் மகாலக்ஷ்மி' படத்தில் அறிமுகமானார். இந்த படத்தை தொடந்து இவருக்கு தமிழில் தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தன.  அஜித், விஜய், சூர்யா, விக்ரம், என முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார்.

தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்தார். 

இந்நிலையில் இவர் கடந்த 2016ஆம் ஆண்டு,  மைக்ரோமேக்ஸ் இணை நிறுவனர் ராகுல் ஷர்மாவை காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஆரின் என்கிற மகள் ஒருவரும் உள்ளார்.

தற்போது மைக்ரோமேக்ஸ் நிறுவனம் பங்குச்சந்தையில் பெரும் சரிவை சந்தித்துள்ளதால், புதிய தொழிலில் கவனம் செலுத்த உள்ளார் என கூறப்படுகிறது.

அதாவது கடந்த 4 ஆண்டுகளில், மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் 93 சதவீத சரிவை சந்தித்துள்ளதாம். இதற்கு முக்கிய காரணம், மிக குறைந்த விலையில் பல்வேறு அதிநவீன வசதிகள் கொண்ட செல்போன்கள் சந்தைக்கு கொண்டு வந்துவிட்டது சீன நிறுவனம். இதனால் பலருடைய தேர்வும் இந்த வகை போன்களாக உள்ளது. 

இந்த இழப்பை சரி செய்யும் விதமாக தற்போது அதிரடி முடிவை எடுத்துள்ளார் நடிகை அசினின் கணவர் ராகுல் சர்மா.  எலக்ட்ரிக் பைக் உற்பத்தி துறையில் களமிறங்க உள்ளாராம். இந்த துறைக்கு எதிர்க்காலத்தில் நல்ல வரவேற்பு இருக்கும் என்கிற நம்பிக்கையில் இந்த துறையை தேர்வு செய்துள்ளார் ராகுல்.