தொடர்ந்து 2 ஹிட் படங்களில் 2 ஹீரோயின்களுடன் களமிறங்கிய அசோக் செல்வன், தற்போது 3 ஹீரோயின்களைக் கொண்ட கதைகளில் நடிக்க உள்ளார்.
அஜித் நடித்த 'பில்லா 2 ' படத்தில் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் அறிமுகமானவர் நடிகர் அசோக்செல்வன். இந்த படத்தை தொடர்ந்து சூதுகவ்வும், பீட்சா 2 , தெகிடி, ஆரஞ்சுமிட்டாய் என தொடர்ந்து கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான ஓ மை கடவுளே, தீனி ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுவும் இரண்டு ஹீரோயின்கள் கொண்ட கதையில் இவருடைய நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

குறிப்பாக தீனி படத்திற்காக தன்னுடைய உடல் எடையை 100 கிலோ வரை கூட்டி மிகவும் மெனக்கெட்டு நடித்திருந்தார். இதையடுத்து ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் மற்றும் பிளாக் டிக்கெட் கம்பெனி ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்றும், அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்மிருதி வெங்கட், சம்யுக்தா ஹெக்டோ, ரியா சுமன் 3 நாயகிகள் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

தொடர்ந்து 2 ஹிட் படங்களில் 2 ஹீரோயின்களுடன் களமிறங்கிய அசோக் செல்வன், தற்போது 3 ஹீரோயின்களைக் கொண்ட கதைகளில் நடிக்க உள்ளார். அசோக் செல்வன் 3 நாயகிகளுடன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் ஆரம்பமாகியுள்ளது. வயகாம் 18 ஸ்டுடியோஸ் - ரைஸ் ஈஸ்ட் எண்டெர்டெய்ன்மெண்ட் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் அசோக் செல்வனுடன் நடிகைகள் ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, சிவாத்மிகாவும் நடிக்க உள்ளனர். இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஆர். கார்த்திக் இயக்குகிறார். முன்னணி ஒளிப்பதிவாளர் ஜார்ஜி சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, கோபி சுந்தர் இசையமைக்கிறார்.
