சமீபத்தில் பெண் குழந்தைக்கு தாயான பிரபல நடிகை அனுஷ்கா ஷர்மா..  கணவர் விராட் கோலியை அலேக்கா தூக்குவது போல் வீடியோ ஒன்றை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

பிரபல முன்னணி நட்சத்திர ஜோடிகள் ஒன்று அனுஷ்கா ஷர்மா - விராட் கோலி ஜோடி.  பல ஆண்டுகளாக காதலித்த இவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும், அனுஷ்கா ஷர்மா தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருவது மட்டும் இன்றி, சில வெப் தொடர்களை தயாரித்தும் வருகிறார்.

இந்நிலையில், கர்ப்பமாக இருந்த அனுஷ்கா சர்மாவுக்கு, சமீபத்தில் அழகிய பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு வாமிகா என பெயர் வைத்துள்ளனர் இந்த நட்சத்திர ஜோடி.  இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை அவரது காதல் மனைவி அலேக்காக தூக்கி தன்னுடைய பலத்தை நிருதித்துள்ள வீடியோவை அனுஷ்கா ஷர்மா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த வீடியோவில்... விராட் கோஹ்லியை பின்புறமாக இருந்து பிடித்துக்கொண்டு அலாக்காக தூக்குகிறார். மீண்டும் தன்னை தூக்குமாறு விராத் கோஹ்லி கூற அதை போன்று அனுஷ்கா மீண்டும் தூக்கி ’என்னால் இதுவும் முடியும் தானே’ என தன்னுடைய பலத்தை நிரூபித்த மகிழ்ச்சியில் சிரிக்கிறார். 

அந்த வீடியோ இதோ...