தெலுங்கு படங்களிலும், சில விளம்பரங்களிலும் தலை காட்டி வந்த அஞ்சலி. ராம் எடுத்த "கற்றது தமிழ்" படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் ஆனந்தி என்ற வேடத்தில் சிறப்பாக நடித்ததற்காக அஞ்சலிக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம் பேர் விருது கிடைத்தது. அதற்கடுத்து "அங்காடி தெரு", "எங்கேயும் எப்போதும்",  "இறைவி", "தம்பி வெட்டோத்தி சுந்தரம்", "கலகலப்பு", "சேட்டை", "வத்திக்குச்சி" உள்ளிட்ட படங்களில் தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். 

ஆரம்பத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த அஞ்சலி, இடையில் கவர்ச்சியில் அதகளம் செய்யும் கதாபாத்திரங்களிலும் தாராளம் காட்டி ரசிகர்களை கிறங்கடித்தார். இடையில் நடிகர் ஜெய் உடனான காதல் வதந்திகளால் தமிழ் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட அஞ்சலி, தெலுங்கில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். 

சமீபகாலமாக உடல் எடை கூடி கொழுக்கு, கொழுக்கு என சும்மா கும்முனு மாறிப்போன அஞ்சலியின் நிலை படங்களில் ஐட்டம் சாங்க்ஸ் ஆடும் அளவிற்கு மாறியது. அதனால் உடல் எடையைக் குறைக்க தீர்மானித்த அஞ்சலி, தீவிர உடற்பயிற்சிகளைச் செய்து உடல் எடையை கணிசமாக குறைத்துள்ளார். 

ஸ்லிம் லுக்கிற்கு மாறி என்ன செய்ய, பட வாய்ப்புகள் வருவதாக தெரியவில்லை. லாக்டவுனுக்கு முன்னதாக தெலுங்கில் மூத்த நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனால் எங்கே நம்மை இளம் ஹீரோக்கள் ஒதுக்கிவிடுவார்களோ? என்று அஞ்சிய அஞ்சலி தனது ஹாட் போட்டோக்களை பதிவிட்டு வாய்ப்பு தேடி வருகிறார். 

View this post on Instagram

#saturday #pic 💃🏻 #weekend #fun

A post shared by Anjali (@yours_anjali) on May 9, 2020 at 8:59am PDT

பட வாய்ப்பிற்காக உடல் எடையை குறைத்தது போதாது என்று, நாளுக்கு நாள் உடை அளவையும் குறைத்துக் கொண்டே போகிறார். தற்போது அநியாயத்திற்கு சின்ன வயசில் எடுத்தது போன்ற குட்டை உடை ஒன்றில் கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்துள்ளார். குடும்ப குத்துவிளக்காக வலம் வந்து கொண்டிருந்த அஞ்சலி, தொடை தெரியும் அளவிற்கு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.