காதல் பிரச்சனை, சித்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறு என சிக்கலில் இருந்து, இப்போது தான் சற்று மீண்டுள்ளார் அந்த 5 என்ற எண்ணில் ஆரம்பிக்கும் பெயர் கொண்ட நடிகை.

சித்தியின் வீட்டை விட்டு வெளியே ஓடி சொன்று, அடைக்கலம் புகுந்த ஐதராபாத்தை தான் தற்போது பாதுகாப்பாக உணர்கிறாராம்.

மேலும் தற்போது அவருடைய ஜாதகத்தின் படி, சொந்த வீடு வாங்கும் நேரம்  வந்துள்ளதாகவும், அதனால் சொந்த வீட்டை சென்னையில், வாங்குவதா அல்லது ஐதராபாத்தில் வாங்குவதா என ஜோதிடரை கேட்டு ஆலோசித்து வருகிறாராம். 

மேலும் தற்போது அம்மணி, உடல் எடையை குறைத்து, தான் கவர்ச்சி வேடங்களில் நடிக்க தயாராக இருப்பதாகவும் வெளிப்படையாக பலரிடம் கூறி வருகின்றாராம்... ஆனால் கிடைப்பதோ, வில்லேஜ் கேரக்ட்டர் தானாம்.