என்ன ஆண்ட்ரியா இது? இப்படி ஒரு உடையில் 'சார்பட்டா' நடிகரிடம் பாக்சிங் கற்கும் நடிகை!!
நடிகை ஆண்ட்ரியா 'சார்பட்டா' பட நடிகர் ஒருவரிடம் பாக்சிங் கற்றுக்கொள்ளும் வீடியோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
நடிகை ஆண்ட்ரியா 'சார்பட்டா' பட நடிகர் ஒருவரிடம் பாக்சிங் கற்றுக்கொள்ளும் வீடியோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், கடந்த ஜூலை 22ஆம் தேதி வெளியான திரைப்படம் 'சார்பட்டா பரம்பரை' இதில் நடிகர் ஆர்யா கதாநாயகனாகவும், துஷாரா விஜயன் கதாநாயகியாகவும் நடித்திருந்தனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பசுபதி, ஜான் விஜய், ஜான் கோகென், அனுபமா குமார், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தின் கதையும், இயக்குனர் அதை கொண்டு சென்ற விதம் மற்றும் இதனை தரமான ஒரு ஸ்போர்ட்ஸ் படமாக எடுத்த இயக்குனர் ரஞ்சித்தை ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தொடர்ந்து பாராட்டி வருகிறார்கள்.
அதுபோல் இந்த படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரமும், அந்த கதையில் வாழ்ந்து நடித்திருந்தனர். தாப்ரோது இந்த படத்தில் நடித்து வந்த அனைத்து பிரபலங்களும் அடுத்தடுத்து பல படங்களில் பிசியாக நடிக்க தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தில் ஒரு பாக்ஸராக வந்து ஆர்யாவிடம் அடி வாங்கி செல்லும் கதாபாத்திரத்தில் நடித்தவர் சந்தோஷ் பிரதாப். இவர் நடிகை ஆண்ட்ரியாவிற்கு பாக்ஸிங் கற்றுக் கொடுக்கும் வீடியோ ஒன்றை ஆண்ட்ரியா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கவர்ச்சி உடையில் பாக்சிங் கற்கும் நடிகை ஆண்ட்ரியாவின் வீடியோ தற்போது ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
ஆண்டிரியா தற்போது, இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பிசாசு' 2 படத்தில் கதையின் நாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. விரைவில் இப்படம் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது வைரலாகி வரும் வீடியோ இதோ...