மதுரையில் பிறந்து துபாயில் வளர்ந்த நடிகைக்கு வாரிசு வளர்ந்து கலைக்கப்பட்ட செய்தியின் ஆபரேஷன் வடு மறைவதற்குள் அதே வாரிசு நடிகர் குறித்து இன்னொரு வதந்தி தீயாய்ப் பரப்ப்பட்டு வருகிறது. இம்முறை செய்தியின் நாயகியாக சிக்கியிருப்பவர் நடிகையும் பார்ட் டைம் பாடகியுமான ஆண்டிரியா. அவர் ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் பாடிய ‘ஹல்லோ மிஸ்டர் எதிர்க்கட்சி’பாடல் தற்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.

தமிழ் சினிமாவில் பன்முகத் திறமைகளை கொண்ட நடிகைகளில் ஒருவர் ஆண்ட்ரியா. இவர் சமீபத்தில் பெங்களூரில் நடந்த கவிதை போட்டியில் கலந்து கொண்டு மிகவும் சோகமான கவிதை ஒன்றை கூறினார்.இந்த கவிதைக்கு காரணம் தான் திருமணமான ஒருவருடன் தொடர்பு வைத்து கொண்டு மனதளவிலும் உடலளவிலும் ஏற்பட்ட பாதிப்பே காரணம் என அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டார். 

ஆனால் அந்த நபர் யார் என்பது பற்றி கூறவில்லை.இதனால் ரசிகர்கள் பலரும் அந்த நபர் யாராக இருக்கும் என கணக்கு போட தொடங்கினார்கள். இறுதியில் சிக்கியது பெரிய இடத்து வாரிசு நடிகர். 
அந்த நடிகர் தான் பலரும் யூகித்திருந்த வேலையில் நடிகை ஆண்டிரியாவே ஒரு பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்து அதற்கு "Hello Mr.Edirkatchi.." என தலைப்பு வைத்துள்ளார். பொதுவாக பாடலை பாடிய புகைப்படத்தை மட்டுமே பகிரும் ஆண்ட்ரியா இப்போது என்ன பாடல் பாடினேன் என்றும் கூறியுள்ளார் என்று ஒரு தரப்பு ரசிகர்கள் கூறினாலும், "புரிந்து விட்டது" என சிரிப்பாய் சிரிக்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். 

இந்த விவகாரம் எங்க போய்முடியப்போகுதோ..? என்று தலையில் அடித்து கொள்கிறார்கள் வாரிசு-க்கு நெருங்கிய பிரபலங்கள். இன்னொரு பக்கம் இந்த நடிகரின் திரையுலக காதல் விவகாரங்களைத் திரட்டுவதற்கென்றே ஒரு டீம் அமைத்து இயங்கிவரும் ஒரு கூட்டம் ‘இப்போதைக்கு இந்த செய்திகள் எல்லாம் வெறும் ட்ரெயிலர்தான். தேர்தல் வரட்டும் மெயின் பிக்‌ஷரை ஓட்டிக்காட்டுகிறோம்’என்று மார்தட்டிக்கொண்டு அலைகிறதாம்.