actress andhi baby birth

நடனத்தின் மீது ஏற்பட்ட காதல் காரணமாக, ஒரு கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்து நடன இயக்குனர் 'கலா' மாஸ்டர் நடத்திய 'மானாட மயிலாட' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் ஆனந்தி.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதைத் தொடர்ந்து ஒரு சில சின்னத்திரை சீரியல்களிலும், நடனப் போட்டிகளிலும் பங்கேற்று பிரபலமானார். இவருடைய நடனத்தைப் பார்த்து தார தப்பட்டை படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார் இயக்குனர் பாலா. 

இதற்கு முன் ஒரு சில படங்களில் இவர் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் அதில் அவரது திறமை வெளிப்படவில்லை. இந்தப் படத்தில் இவர் நடித்தது இவருக்கு ஒரு அடையாளத்தை தேடிக் கொடுத்தது.

இந்நிலையில் கடந்த ஆண்டு இவருக்கும் அஜய்க்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின் இவர் திரைப்படங்களில் நடிக்காமல் ஒதுங்கினார்.

தற்போது அஜய்-ஆனந்திக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்தத் தகவலை அஜய் தன்னுடைய டுவிட்டரில் ஷேர் செய்துள்ளார்... இதற்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை ஆனந்திக்கு தெரிவித்து வருகின்றனர் 

Scroll to load tweet…