கேரள வெள்ளத்தில் இருந்து மீண்டு வந்த நடிகை அனன்யா உருக்கமாக பேசி உள்ளார்.கேரள மாநிலதில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் பத்திற்கும் மேற்பட்ட மாவட்டங்கள் மிகுந்த பாதிப்பு அடைந்து உள்ளது. மக்கள் நிலசரிவில் சிக்கி பெரும் சிக்கலுக்கு ஆளாகி உள்ளனர். இதுவரை 324 நபர்கள் இறந்துள்ளதாக அதிகார பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

பலர் வீடுகளை இழந்து உள்ளனர். எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக உள்ளது. உடுக்க உடை உண்ண உணவு இன்றி பெரிதும் தவித்து வருகின்றனர். ஒரு சில இடங்களில் வீடுகளின் மாடி வரை வெள்ளம் சூழந்துள்ளது. இதனால் பலரும் மொட்டை மாடியிலும், கூரைகளிலும் தஞ்சமடைந்துள்ளனர். 

இதில், நடிகர் நடிகர் ஜெயராம்,பிருத்விராஜின் வீடும் சிக்கியது. பிருத்விராஜின் தாயார் மல்லிகா பல சிரமங்கள் மத்தியில் மீட்கப்பட்டார். இந்நிலையில் பிரபல நடிகை அனன்யாவும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ளார்

இவர், தமிழில், நாடோடிகள், சீடன், எங்கேயும் எப்போதும், புலிவால், அதிதி உட்பட சில படங்களில் நடித்திருக்கிறார். பல மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இவர் திருமணம் முடித்து கொச்சியில் வசித்து வருகிறார். இவர் வீடும் வெள்ளத்தால் சூழப்பட்டது. இது குறித்து பேசிய அவர், "எங்கள் வீடு முழுவதும் தண்ணீருக்குள் மூழ்கியது... நாங்கள் இப்போது பெரும்பாவூரில் உள்ள நடிகை ஆஷா சரத் வீட்டில் தங்கியிருக்கிறோம் மிகவும் வருத்ததுடன் தெரிவித்து உள்ளார்.