நடிகை எமி ஜாக்சன் திரைப்படங்களில் நடிப்பதை விட, அடிக்கடி தன்னுடைய குழந்தையுடன் புகைப்படம் எடுத்து அதனை வெளியிடுவதில் தான் இப்போது பிஸியாக இருக்கிறார்.

கடந்த வாரம், எமி தன்னுடைய குழந்தையுடன் எடுத்து கொண்டு வெளியிட்ட புகைப்படம், ரசிகர்கள் அனைவராலும் நன்கு ரசிக்கப்பட்ட நிலையில், தற்போது... படுக்கை அறையில் படுத்து கொண்டு, பாத்திங் உடையில் எமி தன்னுடைய குழந்தையின் வெளியிட்டுள்ள புகைப்படம்  வைரலாக பரவி வருகிறது.

திருமணத்திற்கு முன்பே குழந்தை பெற்று கொண்ட லண்டன் நடிகை எமி, அடுத்த வருடம் தன்னுடைய காதலர் ஜார்ஜை திருமணம் செய்து கொள்ள உள்ளார். இது குறித்து, ஏற்கனவே அவர் அறிவித்துள்ளார்.

மேலும் திரைப்படங்களில் நடிக்க சிறு இடைவெளி விட்டிருந்தாலும் தொடர்ந்து, மாடலிங் செய்வதில் எமி அதிக கவனம் செலுத்தி வருகிறார். எமி ஜாக்சன் கடைசியாக தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி இருந்த 2 .0 படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.