காதலர்களை அடிக்கடி மாற்றி பரபரப்பான செய்திகளில் அடிபட்டால்தான் நீயும் அடுத்த நயன்தாரா ஆகமுடியும் என்று யாரோ சிலர் தந்த கெட்ட உபதேசத்தால்தான் அமலா பால் அடிக்கடி காதலர்களை மாற்றி வருகிறார் என்கிறார் அவரிடம் நெருங்கிப் பழகிப் பின்னர் ஒதுங்கிகொண்ட ஒரு இரெண்டெழுத்து இயக்குநர்.

’மைனா’ என்ற ஹிட்டு மற்றும் ‘சிந்து சமவெளி’ என்ற பிட்டுப் படத்தின் மூலம் பரபரப்பானவர் அமலா பால். ‘தெய்வத்திருமகன்’ படத்தில் விக்ரமுடன் நெருக்கமாக இருந்தாலும் கமுக்கமாக அப்பட இயக்குநர் ஏ.எல்.விஜயை திருமணம் செய்துகொண்டு சில காலம் செட்டில் ஆகியிருந்தார் அமலா. பின்னர் கல்யாண வாழ்க்கை மிக விரைவில் கசக்கவே,  அவருக்கு தனுஷுடன் நெருக்கம் பற்றிக்கொண்டது. 

இந்த நெருக்கத்தை தனுஷின் வீட்டில் பெரும்புயல் வீசவே பஞ்சாயத்து ரஜினி வரை போய்வந்தது பழைய கதை. அடுத்து ஒரு பெரிய தொழிலதிபரும் தயாரிப்பாளருமான ஒருவர் ‘முப்பொழுதும் அமலா பாலின் கற்பனைகளிலேயே மிதந்து கரைந்துபோனார்.

‘வேலை இல்லாப் பட்டதாரி’யில் ஜோடி சேர்ந்த இந்தக் காதல் பறவைகளின் றெக்கையை அமலாவை விவாகரத்து செய்ததன் மூலம் ஒடித்துப்போட்டார் இயக்குநர் விஜய். இதுதாண்டா சாக்கு என்று மகிழ்ச்சியுடன் விவாகரத்தைப் பெற்றுக்கொண்ட அமலா வீசிய வலையில் ஐந்தாவது சிக்கியிருப்பவர்தான் ‘ராட்சசன்’ விஷ்ணு விஷால்.

இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை லவ் பஞ்சாயத்துகளா என்று அவருக்கு நெருக்கமான இரண்டெழுத்து இயக்குநரிடம் கேட்டபோது, ‘அமலா பால் காதலில் ஒரு தீராத விளையாட்டுப்பிள்ளை. வெற்றி பெறுவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யத்தயாராய் இருப்பவர். தமிழ் சினிமாவில் எப்படியாவது நயன்தாராவின் இடத்தைப் பிடிக்கவேண்டும் என்ற அல்ப ஆசை ஒன்று அவருக்கு உண்டு. அதற்காக இன்னும் ஒரு டஜன் காதலர்களைக் கூட வீழ்த்துவார் என்கிறார்.