லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன்’படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் முதல் தாய்லாந்தில் துவங்கவுள்ளது. 50 நாட்கள் ஒரே மூச்சாக நடைபெறவுள்ள இதன் முதல் ஷெட்யூலில் விக்ரம்,விஜய் சேதுபதி,ஜெயம் ரவி ஆகியோர் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற நடிகர், நடிகைகள் பற்றிய அதிகாரபூர்வமாக இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது. 

இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படமான ‘பொன்னியின் செல்வன்’ல் நடிகை அமலா பாலும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்று சொல்லப்பட்ட நிலையில், அவர் அப்படம் தொடர்பான ஒரு சம்பவத்தால் மிகுந்த மனவேதனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன்’படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் முதல் தாய்லாந்தில் துவங்கவுள்ளது. 50 நாட்கள் ஒரே மூச்சாக நடைபெறவுள்ள இதன் முதல் ஷெட்யூலில் விக்ரம்,விஜய் சேதுபதி,ஜெயம் ரவி ஆகியோர் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற நடிகர், நடிகைகள் பற்றிய அதிகாரபூர்வமாக இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் நடிக்க அழைக்கப்பட்ட நடிகை அமலாபாலை, மணிரதனம் நிராகரித்துவிட்டதாக ஒரு தகவல் உலவுகிறது.அவரை அழைத்து அவருக்கு லுக் டெஸ்ட் எடுத்துப் பார்த்தாராம் மணிரத்னம். ஆனால் அதில் அவருக்கு திருப்தி ஏற்படவில்லை. ஆனால் அத்தகவல் முறைப்படி அமலாபாலுக்குத் தெரிவிக்கப்படவில்லை. அதனால் லேசாக சந்தேகம் ஏற்பட்டு மணிரத்னம் நிறுவனத்தின் புரடக்‌ஷன் மேனேஜர்களை அமலா பால் தொடர்பு கொண்டபோதுதான் அவர் ரிஜக்ட் பண்ணப்பட்ட விசயமே அவருக்குத் தெரிந்திருக்கிறது. அதனால் மனம் உடைந்துபோன அவர்,’ஒரு நியூ ஃபேஸ் மாதிரி என்னை டெஸ்ட் எடுத்துப் பாத்துட்டு இப்பிடி இன்சல்ட் பண்ணிட்டாரே மணி சார்’என்று தனது நட்பு வட்டாரத்தில் புலம்பி வருகிறாராம் அமலா.