’ஆடை’படத்துக்குப் பின் தன்னைத் தேடி புதிய வாய்ப்புகள் எதுவும் வராததால் தனது முன்னாள் காதலர்களுல் ஒருவரான விஷ்ணு விஷாலிடம் நடிகை அமலா பால் வாய்ப்புக் கேட்டு அலைந்த தகவல் வெளியாகியுள்ளது.

அமலா பால் கடைசியாக நடித்து வெளிவந்த ‘ஆடை’படம் செய்திகளில் மட்டும் பரபரப்பாகவே அடிபட்டதே ஒழிய, அது வசூல் ரீதியாக வெற்றிகரமான படமாக மாறவில்லை. இதனால் அமலா பாலுக்கு புதிய படங்கள் எதுவும் ஒப்பந்தமாகவில்லை. ஆடை’பட ரிலீஸுக்கு முன் ஒப்பந்தமான விஜய் சேதுபதியின் படம் ஒன்றிலிருந்தும் அவர் தகவல் தெரிவிக்கப்படாமல் தூக்கி அடிக்கப்பட்டார்.

இந்நிலையில் புதிய வாய்ப்புகள் தனக்குக் குவிந்துவிடும் என்று காத்திருந்த அமலா பால் தனக்கு வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில் ‘ராட்சசன்’பட ஹீரோவும் தனது முன்னாள் காதலருமான விஷ்ணு விஷாலை சந்தித்து வாய்ப்புக் கேட்டிருக்கிறார்.விஷ்ணு விசால்  அடுத்ததாக மான்ஸ்டர் படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்துக்கு இவருக்கு ஜோடியாக நடிக்க கதாநாயகியைத் தேடியபோது அமலா சந்தித்ததால் வாய்ப்பு அவருக்கே கொடுக்கப்பட்டது.

தெலுங்கில் ஹிட்டான ஜெர்சி படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாக இருக்கிறது. நானி நடித்த வேடத்தில் விஷ்ணுவிஷால் நடிக்கிறர். ஷ்ரத்தா ஸ்ரீநாத் வேடத்தில் அமலாபால் நடிக்கிறார். கிரிக்கெட் வீரரை பற்றிய உணர்வுபூர்வமான கதையாக இந்த படம் அமைந்திருந்தது. ராட்சசன் படத்துக்குப் பிறகு விஷ்ணு விஷால், அமலாபால் இணைந்து நடிக்கிறார்கள். ராட்சசன் படத்தின் போதே இருவரும் காதலிப்பதாக கிசுகிசு பரவியது. இருவருமே அதை மறுத்தபடியே காதலித்து வந்தனர். இதோ இருவருக்கும் மீண்டும் ஒரு  காதல் கதை தொடங்கிவிட்டது.