Asianet News TamilAsianet News Tamil

போலி டாகுமெண்ட் கொடுத்து சீட்டிங் செய்த வழக்கு...பாண்டிச்சேரியில் கம்பி எண்ணப்போகும் நடிகை அமலா பால்...

கைவசமிருந்த பணத்தையெல்லாம் ‘ஆடை’பட ரிலீஸுக்கு தானம் தந்துவிட்டு அடுத்த பட வாய்ப்புக்காக அல்லாடிக்கொண்டிருக்கும் நடிகை அமலா பால் மீது போலி இருப்பிட சான்றிதழ் கொடுத்து மோசடி செய்ததாக வழக்கு பாய உள்ளது.

actress amala paul bought a luxery car with fake address
Author
Pondicherry, First Published Aug 29, 2019, 3:29 PM IST

கைவசமிருந்த பணத்தையெல்லாம் ‘ஆடை’பட ரிலீஸுக்கு தானம் தந்துவிட்டு அடுத்த பட வாய்ப்புக்காக அல்லாடிக்கொண்டிருக்கும் நடிகை அமலா பால் மீது போலி இருப்பிட சான்றிதழ் கொடுத்து மோசடி செய்ததாக வழக்கு பாய உள்ளது.actress amala paul bought a luxery car with fake address

கணவர் விஜயை விவாகரத்து செய்த பிறகு கொஞ்சநாள் மட்டும் பிசியாக நடித்துக்கொண்டிருந்த அமலா பால் சமீபகாலமாக படவாய்ப்புகள் இன்றித் தவித்து வருகிறார். சமபாத்தியம் கொஞ்சம் நல்லபடியாக இருந்தபோது  இவர் புதுச்சேரியில் ரூ. 1.12 கோடி மதிப்பிலான பென்ஸ் எஸ்-கிளாஸ் சொகுசு காரை வாங்கினார். கேரளாவில் அந்தக் காரை வாங்கினால் வாகன பதிவு எண் பெறுவதற்காக ரூ.20 லட்சம் வரை செலுத்த வேண்டும். எனவே புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் வாடகைக்கு குடியிருப்பதாகக் கூறி போலி ஆவணங்களைக் காட்டி அந்தக் காரை அமலாபால் பதிவு செய்துள்ளார். இதன் மூலம் அவர்  ரூ.18 லட்சம் வரி ஏய்ப்பு செய்ததாக கூறப்படுகிறது.

இந்த மோசடி கேரள மோட்டார் வாகன பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில்  கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கேரள குற்றப்பிரிவு போலீசார் இந்த வழக்கை விசாரித்து கேரள உயர்நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தனர்.அதில் அமலாபால் போலி முகவரி கொடுத்து வாகனம் பதிவு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கார் பதிவு செய்தது புதுச்சேரியில் என்பதால் அம்மாநில அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாகன பதிவு மோசடி குறித்து புதுச்சேரி போக்குவரத்துத் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டு இந்த வழக்கை கேரள போலீசார் முடித்துக் கொண்டனர்.actress amala paul bought a luxery car with fake address

இந்த விவகாரத்தில் அடுத்தகட்டமாக முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, அமலாபால் மீது மேல் நடவடிக்கை எடுக்க புதுச்சேரி சட்டத்துறைக்கு மாநில போக்குவரத்து ஆணையர் கடிதம் அனுப்பி ஆலோசனை கேட்டிருக்கிறார்.அமலாபால் மட்டுமல்லாது ஃபகத் பாசில், பா.ஜ.க எம்.பி.யும் நடிகருமான சுரேஷ் கோபி ஆகியோரும் இதுபோன்று மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் ஃபகத் பாசில் தனது காரை பதிவு செய்வது சம்பந்தமான பணிகளை வேறு சிலர் கவனித்துக் கொண்டதாக கூறி மன்னிப்புக் கோரியதுடன் அபராதத் தொகையும் செலுத்தியதால் அவரது வழக்கு விசாரணை முடிவுக்கு வந்துள்ளது. நடிகர் சுரேஷ் கோபிக்கு எதிரான வழக்கில் போலி ஆவணம் தயாரித்தல் போன்ற குற்றங்கள் இருப்பதால் அந்த வழக்கையும் போலீசார் விசாரித்து வருகின்றனர். சுரேஷ் கோபி பா.ஜ.க.வைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு ஆபத்து எதுவும் இல்லை. ஆனால் அமலா பால் பாண்டிச்சேர் சிறை ஒன்றில் கம்பி எண்ணப்போகும் காட்சியை நினைத்தால் கண்ணீர் வருகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios