ஆசியாவின் கவர்ச்சிகரமான பெண் என்ற பெருமைக்கு சொந்தக்காரி ஆலியா பட். கடந்த ஆண்டு ஜோயா அக்தர் இயக்கத்தில் ரன்வீர் சிங், ஆலியா பட் நடிப்பில் வெளியான கல்லி பாய் வசூலில் செம்ம மாஸ் காட்டியது. ஆஸ்கர் வரை பரிந்துரைக்கப்பட்ட பெருமையையும் பெற்றது. 

தற்போது பாலிவுட்டின் இளவரசியான ஆலியா பட், சஞ்சய் லீலா பன்சாலி இயக்க உள்ள "Gangubai Kathiawadi" என்ற படத்தில் நடிக்க உள்ளார். மும்பையையே கலக்கிய பெண் கேங்கஸ்டர் ஒருவரின் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். அந்த கதாபாத்திரத்தின் பெயர் கங்குபாய் என வைக்கப்பட்டுள்ளது. 

அதனால் ரியல் கங்குபாயாக மாற பாடி லாங்குவேஜ், ஸ்லாங் என அனைத்திற்கும் பயிற்சி எடுத்து வருகிறார் ஆலியா பட். எப்பவுமே ஆலியா பட் தனது கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வருகிறார். மேலும் அந்த கேரக்டருக்காக அப்படியே தன்னை மாற்றிக்கொள்வதிலும் கில்லாடி.  எனவே அந்த பெண் கேங்கஸ்டரின் மொழியான காத்தியாவாடி மொழியையும், கெட்ட வார்த்தைகளையும் கற்று வருகிறாராம்.