Alia Bhatt Pregnancy : மருத்துவமனையில் செக் அப்புக்கு சென்றபோது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள ஆலியா பட் "எங்களுக்கு குழந்தை வரப் போகிறது'' என்று பதிவிட்டுள்ளார்.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியா பட். கடந்த சில ஆண்டுகளாக நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து வந்த இவர், கடந்த ஏப்ரல் மாதம் குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். கோலாகலமாக நடைபெற்ற இவர்களது திருமணத்தில் ஏராளமான பாலிவுட் திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இதையும் படியுங்கள்... Brahmastra Trailer : ராஜமவுலி படங்களை மிஞ்சும் பிரம்மாண்டம்... வைரலாகும் பிரம்மாஸ்திரம் படத்தின் டிரைலர்

திருமணத்துக்கு பின் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட ஆலியா பட், விரைவில் குழந்தை பெற்றுக்கொள்ள இருப்பதாக பாலிவுட் வட்டாரத்தில் கடந்த சில மாதங்களாக பேச்சு அடிபட்டு வந்தது. தற்போது அது உறுதியாகி உள்ளது. நடிகை ஆலியா பட் தான் கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளார்.

இதையும் படியுங்கள்... சிம்ரன் முதல் சமந்தா வரை... டாப் ஹீரோயினாக இருக்கும்போதே ஐட்டம் டான்ஸ் ஆடி ஷாக் கொடுத்த நடிகைகள் - ஒரு பார்வை

மருத்துவமனையில் செக் அப்புக்கு சென்றபோது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள ஆலியா பட் “எங்களுக்கு குழந்தை வரப்போகிறது” என குறிப்பிட்டு இரண்டு சிங்கங்கள் அதன் குட்டியுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படத்தையும் ஷேர் செய்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் ரன்பீர் கபூர் - ஆலியா பட் ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். டுவிட்டரில் AliaBhatt என்கிற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங், பரினிதி சோப்ரா ஆகியோர் ஆலியா பட்டுக்கு இன்ஸ்டாகிராமில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

View post on Instagram

இதையும் படியுங்கள்... Harish Kalyan : சைலன்டாக நடக்கும் திருமண வேலைகள்... நடிகர் ஹரீஷ் கல்யாணுக்கு விரைவில் டும்டும்டும்?

ஆலியா பட் - ரன்பீர் கபூர் இருவரும் தற்போது பிரம்மாஸ்திரா எனும் பேண்டஸி படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி உள்ள இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 9-ந் தேதி ரிலீசாக உள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.