படப்பிடிப்பு தளத்திற்கு அவர் வந்துவிட்டால் அவரை பார்த்து ரசித்துக்கொண்டே இருப்பேன் என்றும், அவர் அனைவரையும் மதிக்க தெரிந்த மா மனிதர் என்றும்  அல்டி மேட் ஸ்டார் அஜித்தை பிக்பாஸ் அபிராமி புகழ்ந்து தள்ளியுள்ளார்.

சமீபத்தில்,  தமிழகமெங்கும் வெளியாகி சக்கைப்போடு போட்டு வசூலை அள்ளியது மட்டும் அல்ல, இனி தமிழ்சினிமாவில் இது போன்று ஒரு படம்  வரப்போவதில்லை என்று பேசும் அளவிற்கு ஒட்டுமொத்த ரசிகர்களின் பாரட்டையும் பெற்ற படம்  அல்டி மேட் ஸ்டார் அஜித் நடிப்பில் வெளியான ‘நேர்கொண்ட பார்வை’படமாகத்தான் இருக்கும்.  அந்தளவிற்கு திரைக்கதையில், நடிப்பில், வசனத்தில் நேர்த்தி நிறைவு என்று வாயார பாரட்டிக்கொண்டே இருக்கின்றனர் தல ரசிகர்கள்.  இதில் முக்கியமான வேடத்தில் பிக்பாஸ் புகழ் அபிராமி நடித்திருந்தார். படம் வெளியாகும் முன்பே பிக்பாஸ் வீட்டிற்கு அபிராமி சென்றுவிட்டார், அவர் பிக்பாஸ் இல்லத்தில் இருந்த போது படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது.  

பின்னர் பிக்பாஸ் வீட்டில் இருந்து  வந்த கையோடு திரையரங்கிற்கு சென்று படம் பார்த்து ரசித்தார் அபிராமி. பின்னர் அது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர். இப்படம் தன் வழ்க்கையில் மறக்க முடியாத அத்தியாயம் என்றார்,  நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பு தளத்தில் அஜித் உடனான அனுபவங்களையும் அவர் பகிர்ந்து கொண்டார்  ‘படப்பிடிபு தளத்தில்  எங்களின் முழு கவனமும் அஜித் மீது மட்டுமே இருக்கும். நாங்கள் அவரை பார்ப்பதை அவர் பார்த்துவிடுவார். பேசும் போதே அடிக்கடி ஜி ஜி என்றும்  சொல்லுவார். எதற்கு ஜீன்னு சொல்றீங்க. பேசாம அபிராமின்னு பெயரைச் சொல்லியே கூப்பிடுங்க சார்னு சொல்வேன். 

 அதற்கு அவரோ, இல்லை மரியாதையை எல்லாருக்கும் கொடுக்கணும் என்று சொல்வார். அஜித்திடம் மறுபடியும் பேச முடியுமா என்று எனக்கு தெரியவில்லை’ என்றும் அபிராமி  கூறியுள்ளார்.