பிரபல நடிகரும், கர்நாடக முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமியின் மகனுமான நிகில் குமாரசாமி - ரேவதி ஆகியோரின் திருமணம் இன்று மிகவும் எளிமையான முறையில் நடந்து முடிந்துள்ளது.

முன்னாள் கர்நாடக முதல்வரும், மதசார்பற்ற ஜனதாதளம் தலைவர் எச்.டி.தேவகவுடாவின் மகனுமான  எச்.டி. குமாரசாமி மற்றும் அனிதா குமாரசாமி தம்பதியின் மகனும் திரைப்பட நடிகருமான  நிகில் குமாரசாமிக்கும், முன்னாள் கர்நாடக அமைச்சர் எம்.கிருஷ்ணப்பாவின் உறவுக்கார பெண், ஒருவருக்கும் கடந்த இரண்டு மாதத்திற்கு முன் திருமண நிச்சயதார்த்தம் வெகு விமர்சியாக நடந்து முடிந்தது.

எனவே திருமணம் இதை விட பல மடங்கு விமர்சியாக நடக்கும் என எதிர்பார்க்கபட்டது. ஆனால் தற்போது இந்தியாவையே ஆட்டி வைக்கும் கொரோனா தொற்று காரணமாக இவர்களுடைய திருமணம், குறிப்பிட்ட தேதியில் மிகவும் எளிமையாக... எச்.டி.குமாரசாமிக்கு சொந்தமாக உள்ள பண்ணை வீட்டில் நடைபெற்று முடிந்துள்ளது.

இதில் நெருங்கிய குடும்பத்தினர் 100 பேர் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். மற்ற படி கட்சி காரர்கள், மற்றும் பத்திரிக்கையாளர்கள் என யாரும் அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

எளிமையான முறையில் இவர்களின் திருமணம் நடந்து முடிந்த நிலையிலும், இவர்களுடைய திருமணத்தில் கலந்து கொண்ட பலர், கொரோனா அச்சுறுத்தல் இருந்தும் முகக்கவசம் போன்றவை அணியாமல், இருந்ததாக கூறப்படுவது 
மற்றொரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.