கொரோனா வைரஸ் காரணமாக, வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு வருபவர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை, பிரபலங்கள் மட்டும் இன்றி , பலரும் செய்து வருகிறார்கள். இதன் மூலம் அவரவரின், மனிதாபிமானமும் வெளிப்பட்டு வருகிறது.

குறிப்பாக பிரபலங்களை விட அவர்களுடைய ரசிகர்கள், கொரோனா வைரஸின் தடுப்பு பணிக்காக களத்தில் இறங்கி வேலை செய்து வருவது, பார்பவர்களையே ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், படப்பிடிப்பு வேலைகள் நின்று போனதால், கஷ்டப்பட்டு வரும் பாலிவுட் திரையுலகை சேர்ந்த கூலி தொழிலாளர்கள், 23 ,௦௦௦ ஆயிரம் பேருக்கு, நடிகர் சல்மான் கான், தலா 3000 வீதம் ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் டெபாசிட் செய்துள்ளார்.

தற்போதைக்கு இந்த பணத்தை அவர்கள் அத்தியாவசிய செலவிற்காக அளித்துள்ளதாகவும், மீண்டும் இதே நிலை தொடர்ந்தால் உதவி செய்ய தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். 

சமீபத்தில் நடிகர் அமிதாப் பச்சன், திரையுலகை சேர்ந்த 1 லட்சம் பேருக்கு ஒரு மாதத்திற்கு தேவையான, அரிசி, கோதுமை, மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்குவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.  கஷ்டப்பட்டு வரும் தொழிலாளர்களுக்கு இவர்கள் போட்டி போட்டு கொண்டு செய்து வரும் உதவிகளை பலரும் மனதார பாராட்டி வருகிறார்கள்.