1963 ஆம் ஆண்டு பிறந்த நடிகை ஸ்ரீ தேவி தன்னுடைய 4 வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்தார். பாலிவுட் திரையுலகில் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேல் முன்னணி நடிகையாக நடித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தன்னுடைய கணவர் போனி கபூர் மற்றும் மகள் குஷியுடன் குடும்ப நண்பர் திருமணத்திற்கு துபாய் சென்றிருந்தார். இந்நிலையில் நேற்றிரவு திடீர் என இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்தார். 

4 வயதில் தன்னுடைய நடிப்பை துவங்கி 54 வயது வரை நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் புகைப்பட தொகுப்பு இதோ..