Asianet News TamilAsianet News Tamil

நயன்தாராவையே கவுத்திய யோகிபாபு... ஜப்பான்காரன் கொண்டாந்து கொட்டும் கோடிகள்!

விஜய்யின் புதிய படத்தில் ஃபுல் லென்த் காமெடி செய்ய இருக்கும் நடிகர் யோகிபாபுவின் சம்பளம் என்பது லட்சமாம்! இந்த ஆளுட்ட அப்படியென்ன இருக்குது?ன்னு காண்டாகிறார்கள் கோலிவுட்டின் மற்ற காமெடியன்கள்

Actor Yogi Babu salary
Author
Chennai, First Published Dec 7, 2018, 3:54 PM IST

* தி.மு.க.வின் கூட்டணியில் பா.ம.க. இணைவதற்கான சாத்தியகூறுகள் உருவாகிவிட்டன என்கிறார்கள்.: செய்தி. (ஓகே! ஓகே! இனி தைலாபுரத்துல இருந்து நுங்கம்பாக்கத்துக்கு கார்கள் வரும். கேட்டா ‘மரியாதை நிமித்தமான சந்திப்பு’ம்பாய்ங்க. ஆனால் அன்புவும், ஸ்டாலுவும் ஒரே மேடையில உட்காரப்போறத நினைச்சாதான் தல சுத்துது)

* மோடி மற்றும் பி.ஜே.பி. மீது மேனகா காந்தி கடும் வருத்தத்தில் உள்ளதால் வரும் தேர்தலில் போட்டியிட போவதில்லையாம். இந்நிலையில், அவரது மகனும் பி.ஜே.பி. எம்.பி.யுமான வருண்காந்தியை காங்கிரஸினுள் கொண்டு வரும் முடிவில் இருக்கிறாராம் ராகுல். சகோதரியான பிரியங்கா பேசினால் வருண் கேட்பார் என்று, பிரியங்காவிடமே அந்த அஸைன்மெண்டை ஒப்படைத்துள்ளாராம்: தகவல். (அப்போ பி.ஜே.பி.க்கு கிடைக்க இருந்த ஒரு எம்.பி. சீட்டும் போகப்போவுதுன்னு சொல்லுங்க! அப்படின்னு யாராச்சும் கமெண்ட் அடிச்சு பல்லைக் காட்டினா, கம்பெனி பொறுப்பில்லைங்க.)

* அ.தி.மு.க.வுக்கென்று ஒரு வரலாறு உண்டு!: என துணை முதல்வர் ஓ.பி.எஸ். கூறியுள்ளார். (ஆமா! ஆமா! சும்மாவா தலைவரே? மரியாதை இல்லேன்னு சொல்லி பிரியுறதென்ன, பிறகு பதவி வாங்கிட்டு அலட்சியங்களைக் கண்டுக்காம இருக்கிறதென்ன, ஹெலிகாப்டரைப் பார்த்து கன்னத்துல போடுறதென்ன...இன்னும் எனெனென்னவோ இருக்குது போங்க.)

* 2.0 படத்துக்கான விளம்பரங்களில் தாராளம் காட்டாத காரணத்தினால், தனது அடுத்த படத்தை தயாரிக்கும் அனுமதியை லைக்காவிடம் கொடுக்க யோசிக்கிறாராம் ரஜினி: செய்தி. (நீ ஆடு தலைவா! நீ கண்ணசைச்சா கோடிகளா கொண்டாந்து கொட்டுறதுக்கு ஜப்பான்காரனே ஓடியாருவான், லைக்காவாவது பைக்காவாவது)

* விஜய்யின் புதிய படத்தில் ஃபுல் லென்த் காமெடி செய்ய இருக்கும் நடிகர் யோகிபாபுவின் சம்பளம் என்பது லட்சமாம்! இந்த ஆளுட்ட அப்படியென்ன இருக்குது?ன்னு காண்டாகிறார்கள் கோலிவுட்டின் மற்ற காமெடியன்கள்: செய்தி. (என்ன பாஸ் இப்படி கேட்டுட்டீங்க? லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு புடிச்ச ஹேர்ஸ்டைலே யோகியோதுதான். அந்த புசுபுசு முடிய பிடிச்சு செல்ஃபியே எடுத்து வெச்சிருக்குது நயன் பொண்ணு. அது கை பட்டதுக்காகவே எண்பது லட்சம் கொடுக்கலாம்யா)

Follow Us:
Download App:
  • android
  • ios