’இனி ஹீரோவாக நடிக்க மாட்டேன். ஒன்லி காமெடி ரோல்கள் மட்டும் தான்’ என்று நடிகர் யோகி பாபு சொல்வதை சீரியஸாக எடுத்துக்கொள்ளவேண்டியதில்லை என்று நெட்டிசன்கள் அவரை கண்டமேனிக்கு கலாய்த்துவருகிறார்கள். 

அதற்கு ஆதாரமாக  தர்மபிரபு என்ற படத்தில் அவர் கதாநாயகனாக நடிப்பதாக சில மாதங்களுக்கு முன் செய்திகள் வெளியானபோது முன்னணி வார இதழில் அவருடைய பேட்டியை இப்போது படித்துப்பாருங்கள்.

அப்போது தர்மபிரபு படத்தில் ஹீரோவாக நடிப்பது பற்றி,
தர்மபிரபு படத்தில் நீங்கள் ஹீரோதானே? எமதர்மன் தோற்றத்தில் இருக்கும் உங்களை வைத்துத்தானே அந்தப்படத்துக்கே பப்ளிசிட்டி செய்து வருகிறார்கள்?என்று யோகிபாபுவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு யோகிபாபு சொன்ன பதில் என்ன தெரியுமா?“சார் இந்த விஷயத்தை நல்லா போல்டா போடுங்க. நான் இப்ப பண்ற படங்கள் எதிலுமே நான் ஹீரோ கிடையாது. 10 கோடி கொடுத்தா கூட எனக்கு ஹீரோ கேரக்டர் வேண்டவே வேண்டாம்.தர்மபிரபு படத்தில் நான் ஹீரோவாக நடிக்கலை. அந்தப் படத்துல இரண்டு ஹீரோ இருக்காங்க. அதை டைரக்டர் சஸ்பென்சா வெச்சுருக்கார்.

அதனால படத்தில் தர்மராஜா கேரக்டர் ரோல்தான் நான் பண்றேங்கிறதை சொல்லாமல் என்னை வைத்து பப்ளிசிட்டி பண்ணிக்கிட்டிருக்காங்க. உண்மையைச் சொல்லணும்னா…. அந்தப் படத்தில கடைசி அரை மணி நேரம்தான் வருவேன்.இப்படியாக பச்சைப்பொய்யை சொல்லி இருக்கிறார் யோகிபாபு. இதன் மூலம் மீடியாக்களை மட்டுமல்ல மக்களையும் முட்டாள் என்று நினைத்துள்ளார். தர்மபிரபு படத்தில் 99 சதவிகித காட்சிகளில் யோகிபாபு மட்டும்தான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இனி ஹீரோவாக நடிக்க மாட்டேன் என்று அவர் சொல்வதையும் இப்படித்தானே எடுத்துக்கொள்ளவேண்டும்?