பிரபல காமெடி நடிகர் யோகி பாபுவிற்கும், மஞ்சு பார்கவி என்கிற பெண்ணிற்கும் கடந்த பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி திருத்தணி முருகன் கோவிலில் மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. இதை தொடர்ந்து இவர்களுடைய வரவேற்பு விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு யோகி பாபு பிரபலங்களுக்கு நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்து வருகிறார்.

கண்டிப்பாக 2020 ஆம் ஆண்டு தனக்கு திருமணம் நடந்து விடும் என்றும், தீவிர பெண் வேட்டை பெற்றோர் நடத்தி வருவதாக கூறி வந்த யோகி பாபு திடீர் என, ரகசியமாக உறவினர்கள் மத்தியில் பெற்றோர் பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

யோகிபாபுவின் குலதெய்வ கோவிலில் நடந்த இந்த திருமணத்தில்,  இவரது நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்துகொண்டனர். மார்ச் மாதம் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என கூறப்பட்டது.

சிறிய சிறிய வேடங்களில் நடித்து... பல்வேறு போட்டிகளுக்கு நடுவே தன்னுடைய திறமையால் உயர்ந்து நிற்கும் யோகி பாபுவுக்கு, விரைவில் திருமண வரவேற்பு பிரமாண்டமாக நடைபெற உள்ளதை முன்னிட்டு,தன்னுடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அனைவரும் நேரில் சந்தித்து அழைப்புதழ் கொடுப்பதில் ஒரு பக்கம் பிஸியாக இருக்கிறார் யோகி பாபு.

அந்த வகையில் தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்தை,  நேரில் சந்தித்து திருமண வரவேற்பு பத்திரிக்கையை கொடுத்தார். இதனை விஜயகாந்த் தன்னுடைய மகன் விஜய பிரபாகரனுடன் சேர்ந்து பெற்றுக்கொண்டார். தற்போது இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.