பல கன்னட படங்களில் நடித்து, முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர்  யஷ். இவர் நடிப்பில், கடந்த ஆண்டு வெளியான 'KGF ' தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய தென்னிந்திய மொழிகளில் வெளியாகி ஒட்டு மொத்த திரையுலகினரையும் திரும்பி பார்க்க வைத்தது. இந்த படத்தின் இரண்டாவது பாகத்திலும் இவர் நடித்து வருகிறார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு ராதிகா பண்டிட் என்பவரை யஷ் திருமணம் செய்து கொண்டார். சம்மேபத்தில் தான் இவருக்கு அழகிய பெண் குழந்தை ஒன்றும் பிறந்தது. 

இந்நிலையில் தற்போது தன்னுடைய அழகிய குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு, தன்னுடைய உலகத்தை ஆட்சி செய்பவள் இந்த பெண் தான்.  இன்னும் தன்னுடைய குழந்தைக்கு பெயர் வைக்க வில்லை , ஆனால் அனைவரும் YR  என அழைத்து வருவதாக கூறியுள்ளார். மேலும் தன்னுடைய குழந்தைக்கு அனைவருடைய வாழ்த்துக்களும் தேவை என பதிவிட்டுள்ளார்.

 

இதை பார்த்த நடிகர் யஷ் ரசிகர்கள், மற்றும் பலர் தொடர்ந்து இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.