Asianet News TamilAsianet News Tamil

#BREAKING நடிகர் விவேக் உடல்நிலை சீரியஸா..? சிகிச்சை குறித்து வெளியான பகீர் தகவல்!

மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக்கிற்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

actor vivek under ecmo treatment
Author
Chennai, First Published Apr 16, 2021, 1:45 PM IST

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், நடிகர் விவேக் நேற்று அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டார். கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் தொற்று வரும் ஆனால் உயிரிழப்புகளை தடுக்கும் என்பதால் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார். 

actor vivek under ecmo treatment

இந்நிலையில் இன்று காலை நடிகர் விவேக்கிற்கு  மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து சென்னையில் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். வரும் போதே அவர் மயக்க நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த செய்தியை அறிந்த திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் விவேக் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டுமென பிரார்த்தித்து வருகின்றனர். 

actor vivek under ecmo treatment

வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு அழைத்து வரும் போதே விவேக்கிற்கு கடுமையான மூச்சுத்திணறல் இருந்தது. எனவே ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப்பட்டுள்ள விவேக்கிற்கு எக்மோ கருவிகளை பொருத்தி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விவேக்கின் இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை சீராக்குவதற்காக எக்மோ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து நடிகர் விவேக்கிற்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Follow Us:
Download App:
  • android
  • ios