Asianet News TamilAsianet News Tamil

நகைச்சுவை நடிகர் விவேக்கின் தாயார் மாரடைப்பால் காலமானார்...

பிரபல நகைச்சுவை நடிகரும் சமூக சேவகருமான பத்மஸ்ரீ விவேக்கின் தாயார் இன்று சற்று முன்னர் சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 86.

actor vivek's mother passed away
Author
Chennai, First Published Jul 17, 2019, 1:56 PM IST

பிரபல நகைச்சுவை நடிகரும் சமூக சேவகருமான பத்மஸ்ரீ விவேக்கின் தாயார் இன்று சற்று முன்னர் சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 86.actor vivek's mother passed away

விவேக் 1961 நவம்பர் 19 ஆம் நாளில் அங்கய்யா பாண்டியன், மணியம்மாள் தம்பதியருக்கு  மகனாக மதுரையில் பிறந்தார். இவரது சொந்த ஊர் கோயில்பட்டி - இலுப்பை ஊரணி. இவரது தந்தை இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் ஆசிரியராக பணியாற்றியவர்.

சிலகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த நடிகர் விவேக்கின் தாயார்  மணியம்மாள் (86) விவேக்கின் சாலிகிராமம் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற்றுவந்தார். நேற்று இரவு அவரது உடல்நிலை பலவீனமடைந்த நிலையில்  இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். அவரது உடல் நாளை காலை அவரது சொந்த ஊரான சங்கரன்கோயில் , பெருங்கோட்டூர் கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்படவிருக்கிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios