புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பல ஏழை மக்களுக்கு இலவச சிகிச்சை செய்து, பலருக்கும் உயிர்கொடுத்து மறுவாழ்வு தந்த மருத்துவர் வி.சாந்தா, இதய நோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். இவருக்கு நடிகர் விவேக் ட்விட்டர் மூலம் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார். 

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பல ஏழை மக்களுக்கு இலவச சிகிச்சை செய்து, பலருக்கும் உயிர்கொடுத்து மறுவாழ்வு தந்த மருத்துவர் வி.சாந்தா, இதய நோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். இவருக்கு நடிகர் விவேக் ட்விட்டர் மூலம் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவரும், புற்று நோய் மருத்துவருமான சாந்தா, கடந்த சில வருடங்களாகவே இதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை காலமானார்.

93 வயதாகும் இவர், புற்று நோயால் பாதிக்கப்பட்ட பல ஏழை மக்களை காப்பாற்றுவதற்காகவே தன்னுடைய வாழ்வின் பெரும் பகுதியை செலவிட்டவர். இவர் சேவைக்கு அங்கீகாரமாக, பத்மஸ்ரீ விருது, பத்மபூஷன் விருது, அன்னை தெரசா விருது, அவ்வையார் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றார். மேலும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை வளர்ச்சிக்கு இவருடைய பங்கு பெருமளவு இறந்தது என்றால் அது மிகையாகாது. 

தற்போது மக்களின் அஞ்சலிக்காக அடையாறு மருத்துவமனையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் முதலமைச்சர், துணை முதலமைச்சர், பாரத பிரதமர் மோடி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும், சமூக சேவகர்கள், நடிகர் நடிகைகள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில், தற்போது நடிகர் விவேக், தன் வாழ் நாள் முழுவதையும் புற்று நோய் நோயாளிகளின் நலனுக்காகவே அர்ப்பணித்த பத்மவிபூஷன் சாந்தா அம்மையார் வாழ்வு 94ஆவது அகவையில் நிறைவுற்றது. தன்னலமற்ற வாழ்க்கைக்கு ஓர் எடுத்துக்காட்டு என்றும், பற்றற்ற வாழ்வு வாழ்ந்து- பாழும் புற்றுநோய்க்கு ஓர் முற்று வைக்க காலமெல்லாம் களம்கண்ட ஆலமரம் சற்றுமுன் சாய்ந்ததம்மா! சாந்தா அம்மா! நீ சரித்திரம் அம்மா!! என பதிவிட்டுள்ளார்.

மேலும் நேரடியாக மருத்துவர் சாந்தாவின் இல்லத்திற்கு சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார் நடிகர் விவேக் என்பது குறிப்பிடத்தக்கது. 

Scroll to load tweet…
Scroll to load tweet…