அண்மையில் தனது எடுப்பான இடுப்பு மடிப்பு புகைப்படம் ஒன்றுக்காக தமிழ் சமூகத்தால் தம் பிடித்துக் கொண்டாடப்பட்ட நடிகை ரம்யா பாண்டியனுக்கு ’ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், அட்லீ போன்ற இயக்குநர்கள் வாய்ப்புத் தரவேண்டும்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் வேண்டுகோள் வைத்திருப்பதுடன் அவர்கள் மூவருக்கும் அச்செய்தியை டேக் செய்திருக்கிறார் காமெடி நடிகரும் சமூக செயல்பாட்டளருமான விவேக். அவரது இந்த அதிர்ச்சி நடவடிக்கையால் சினிமா மக்கள் தொடர்பாளர்களும் நடிகைகளின் மேனேஜர்களும் ‘தங்கள் பொழப்பில் மண் விழுந்துவிடுமோ’ என அதிர்ந்துபோயுள்ளனர்.

‘ஜோக்கர்’,’ஆண் தேவதை’படங்களின் நாயகி ரம்யா பாணிடியன் அடுத்தடுத்த படங்கள் இல்லாமல் தவித்து வருவது குறித்து தமிழ் சமூகம் அதிகம் கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறது.இந்நிலையில் சமீபத்திலவர் மொட்டை மாடி ஒன்றில் எடுத்துக்கொண்ட படங்களை வலைதளங்களில் போட்டு வலை வீசினார். அந்த வலையில் அடுத்த படம் மாட்டியதோ இல்லையோ தமிழ் சனங்களில் சுமார் 63 சதவிகிதம் பேர் சிக்கினர். அதிலும் குறிப்பாக இடுப்பு மடிப்பு தெரிய அவர் ஒய்யாரமாக அமர்ந்திருந்த ஒரு படம் பலரையும் வெட்டிச் சாய்த்தது. அந்தப் புகைப்படத்துக்குக் கீழே வெளியான கமெண்டுகளில் பலரும் ‘இப்படிப்பட்ட பேரழகி வாய்ப்பில்லாமல் மொட்டை மாடியில் காத்திருக்கிறாரா?’என்று பதிவிட்டனர். இன்னும் சிலர் ரம்யா பாண்டியனுக்கு ஆர்மி துவங்கி தங்கள் விசுவாஸத்தை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் அந்த ஆர்மியில் தன்னையும் இணைத்துக்கொண்ட காமெடி நடிக விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில்,...பண்பும்,அழகும், பதில்களில் பணிவும் கொண்ட ரம்யாபாண்டியன் தன் நடிப்பால் ஜோக்கர்,ஆண்தேவதை படங்களில் மிளிர்ந்தார்.தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு அதை சரியாக உச்சரிக்கவும் செய்யும் இவரை தமிழ் சினிமா வரவேற்க வேண்டும் என்பது என் பணிவான வேண்டுகோள் @ARMurugadoss @Atlee_dir @shankarshanmugh...என்று பதிவிட்டுள்ளார்.