உதவி இயக்குனராக இருந்து 'செல்லமே' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் விஷால். தற்போது நடிகர் சங்க செயலாளர் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவர் என்கிற இரண்டு பதவிகளை நிர்வகித்து வருகிறார்.

மேலும் இவருடைய நடிப்பில் விரைவில் இரும்பு திரை படம் வெளியாக உள்ளது. அதே போல் லிங்குசாமி இயக்கத்தில் 'சண்டக்கோழி 2' படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் இந்த படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைப்பெற்று வந்ததாக கூறப்படுகிறது. அப்போது விஷாலுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதனால் அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து படக்குழுவினர் சிகிச்சையளிதுள்ளனர். இந்நிலையில் அவர் மீண்டும் சிகிச்சைக்காக அமெரிக்காவில் உள்ள பிரபல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில் விஷாலுக்கு நீண்ட நாளாக தீராத தலைவலி பிரச்சனையால் விஷால் அவதிப்பட்டு வந்ததாகவும் அதனை அவர் பெரிதாக எடுதுக்கொள்ளததால் தற்போது சிகிச்சைக்காக அமெரிக்க அழைத்து செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.