‘நான் காதலித்துத் திருமணம் செய்துகொள்ளப் போகும் அனிஷா ஒரிஜினல் புலியையே வசியம் செய்து தூங்க வைக்கும் அளவுக்கு பயங்கரமான திறமை கொண்டவர்’ என்கிறார் ‘பாயும் புலி’ பட  ஹீரோவான விஷால்.

sஇல வாரங்களாக காதல் வதந்திகள் எதுவும் வராமல் வாடி வதங்கிப்போயிருக்கும் நடிகர் விஷால் தெலுங்கு நடிகை அனிஷா ரெட்டியை விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார். அனிஷாவிடம் காதலில் விழுந்தது பற்றி விஷால் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:-

’நான் ஒரு படத்தில் நடித்து கொண்டிருந்தபோது அனிஷாவை முதன்முதலாக பார்த்தேன். அவரை பார்த்தவுடன் பிடித்துவிட்டது. எங்கள் நட்பு கொஞ்சம், கொஞ்சமாக வளர்ந்து திருமணம் வரை வந்துள்ளது. நான் தெரு நாய்களை பற்றி ஒரு படம் எடுக்க திட்டமிட்டிருந்தேன். தெரு நாய்கள் பற்றிய படம் குறித்து நான் அனிஷாவிடம் தெரிவித்து அவரின் கருத்தை கேட்டேன். அந்த படம் குறித்த விவாதங்களின் போது எங்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. நான் தான் காதலை முதலில் சொன்னேன்.

அனிஷாவை கடவுள் எனக்காக அனுப்பி வைத்துள்ளார். அனிஷா பற்றி யாருக்கும் தெரியாத ஒரு தகவலைச் சொல்கிறேன்.  அனிஷா தேசிய அளவிலான கூடைப்பந்து வீராங்கனை. சமூக சேவையும் செய்து வருகிறார். அவர் திருமணத்திற்கு பிறகு நடிப்பது அவர் விருப்பம். அதில் நான் தலையிட மாட்டேன். அனிஷாவை பற்றிய இன்னொரு  ரகசியம் ஒன்றை சொல்கிறேன். அவர் புலிக்கு பயிற்சி அளிக்கும் திறமை கொண்டவர். அவர் எந்த புலியையும் எளிதில் தூங்க வைத்துவிடுவார். அப்படி ஒரு வீடியோவை முதன் முதலாக பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன்’என்று புலியையே அடக்கும் பெண் தன்னை என்ன பாடுபடுத்துவார் என்ற எதிர்கால பயம் எதுவுமின்றி பேசுகிறார் விஷால்.