சமூக சேவகி ஒருவரிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக புகார் தரப்பட்ட பிரபல மலையாள நடிகர் வயநாடு காவல் நிலையத்தில் சரணடைந்து அடுத்த சில நிமிடங்களிலேயே பெயிலில் வெளியே வந்தார்.

தமிழில் தனுஷ், சிம்பு, விஷால் படங்களில் நடித்தவர்  கேரள நடிகர் விநாயகன். தமிழில் திமிரு, சிலம்பாட்டம், மரியான் மற்றும் சில படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவருக்கு பிரபலம் குறைவு என்றாலும் கேரள சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மிருதுளாதேவி சசீதரன் என்ற இளம்பெண்ணிடம் செல்போனில் தகாத முறையில் சாதீய ரீதியாக பேசியதாக பேஸ்புக்கில் மிருதுளாதேவி பதிவிட்டிருந்தார்.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள அழைத்த போது, ஆபாசமாகப் பேசியதாக விநாயகன் மீது புகார் கொடுத்தார். தன்னை மட்டுமல்லாது தன் தாயையும் அவர் விருப்பும்படி நடந்துகொள்ள வேண்டும் என்று சொன்னதாக, விநாயகன் மீது காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார். இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். 

 இதனையடுத்து அவரை கைது செய்யக்கோரி கேரளாவில் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வந்தன.இதனால் விநாயகன் மீது 4 பிரிவுகளில் போலீஸார் கடந்த ஜூன் 15ஆம் தேதி வழக்குப் பதிவு செய்துள்ளனர். 506, 294பி, கேபிஏ 120, 120ஓ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.இந்நிலையில் இன்று தனது வழக்கறிஞருடன் வயநாடு காவல்நிலையத்துக்கு வந்த விநாயகன்,  தனது தரப்பு விளக்கத்தை காவல் நிலையத்தில் தெரிவித்துவிட்டு சரணடைந்தவுடனேயே பெயில் பெற்று திரும்பிவிட்டார். அதே சமயத்தில் காவல் நிலையத்துக்கு வந்திருந்த மிருதுளாதேவி விநாயகன் தன்னிடம் தவறாகப் பேசியதற்கான ஆதாரம் தனது செல்போனில் இருப்பதாகவும் அதைக் கோர்ட்டில் சமர்ப்பிக்கவிருப்பதாகவும் தெரிவித்தார்.