Asianet News TamilAsianet News Tamil

’தன்மானத்துக்கு இழுக்கு வந்ததால் தாக்கினேன்’...நடிகர் விமெல் விளக்கம்...

‘கன்னட நடிகர் அபிஷேக்கைத் தாக்கிய வழக்கில் போலீஸுக்குப் பயந்துகொண்டு தலைமறைவாகவில்லை. அன்றைய தினத்தில் என் சித்தப்பா காலமாகிவிட்டதால் ஊருக்குப் போய் போனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிவைக்கவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது’ என்று தன்னிலை விளக்கமளித்திருக்கிறார் நடிகர் விமெல்.

actor vimal statement
Author
Chennai, First Published Mar 17, 2019, 9:41 AM IST

‘கன்னட நடிகர் அபிஷேக்கைத் தாக்கிய வழக்கில் போலீஸுக்குப் பயந்துகொண்டு தலைமறைவாகவில்லை. அன்றைய தினத்தில் என் சித்தப்பா காலமாகிவிட்டதால் ஊருக்குப் போய் போனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிவைக்கவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது’ என்று தன்னிலை விளக்கமளித்திருக்கிறார் நடிகர் விமெல்.actor vimal statement

கடந்த வாரம் மேன்சன் ஒன்றில் நடிகர் விமல் தரப்புக்கும்,கன்னட நடிகர் அபிஷேக் தரப்புக்கும் கைகலப்பு ஏற்பட்டு இருதரப்பினரும் போலிஸில் புகார் செய்திருந்தனர். இந்த சண்டையின் சிசிடிவி காணொளி வலைதளங்களில் வைரலானது.முதலில் அபிஷேக் தரப்பு புகார் அளித்திருந்ததால் நடிகர் விமெலை விசாரிக்க போலீஸார் தேடியபோது அவர் அகப்படவில்லை. அவரது செல்போனும் தொடர்ந்து ஸ்விட்ச் ஆஃபிலேயே இருந்தது.

இந்நிலையில் நடந்த சம்பவத்துக்கு நடிகர் விமெல் விளக்கம் அளித்திருக்கிறார்.’அந்த நடிகர் ரிஷப்சனில் அமர்ந்திருந்ததால் மேன்சன் ஊழியர் என்று தவறாக நினைத்து அணுகிவிட்டோம். எங்கள் தவறை உணர்ந்து சரி செய்ய முயலுவதற்குள் தன்மானத்துக்கு இழுக்கு வரும்படி கெட்டவார்த்தைகளை உபயோகித்ததால் கைநீட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டது.actor vimal statement

அதேபோல் நான் போலீஸுக்குப் பயந்து தலைமறைவாக ஆனதாக வந்த செய்திகளிலும் உண்மை இல்லை. என் சித்தப்பா தவறிவிட்டதால் துக்க வீட்டில் போனை ஆஃப் செய்திருந்தேன். இப்போது இரு தரப்புக்கும் இடையில் சமாதான பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. அப்படி அவர்கள் ஒத்துவராவிட்டால் பிரச்சினையை சட்டப்படி எதிர்கொள்ளவும் தயார்’ என்கிறார் விமெல்.

Follow Us:
Download App:
  • android
  • ios