actor vimal eating ice briyani and onion
தமிழ் சினிமாவில், நடிகர் விஜய் நடித்த 'கில்லி', 'குருவி', ஆகிய படங்களில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்து, இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய, 'பசங்க' திரைப்படம் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தவர் நடிகர் விமல்.
குழந்தைகளை மையமாக வைத்து, கிராமத்துப் பின்னணியில் எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் இந்த படம் விமல் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாகவும் அமைந்தது என கூறலாம்.
இந்த படத்தை தொடர்ந்து நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் விமல், தற்போது லட்ச கணக்கில் சம்பளம் பெரும், ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார்.
இந்நிலையில், தற்போது விமல் அடிக்கிற வெயிலுக்கு பழைய சோறு தான் உடலுக்கு உகர்ந்தது என்பதை அறிந்து பழைய சாதத்துடன் பச்சை வெங்காயமும் சாப்பிடும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதை பார்த்து ரசிகர்கள் பலரும் அவரது எளிமையை பாராட்டி வருகின்றனர். விமல் தற்போது களவாணி 2 படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக நடித்துவருகிறார். அந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
அவருக்கு ஜோடியாக இந்த படத்தில் ஓவியா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
