நடிகர் விக்ரமின் தந்தை மரணம்...! 

actor vikram father death
actor vikram father death


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விக்ரம், இவருடைய தந்தை வினோத் ராஜ் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக தனது 80 ஆவது வயதில் காலமானார்.

actor vikram father death

சென்னையில் வசித்து வந்த இவருக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை திடீர் என  நெஞ்சுவலி ஏற்பட்டு, மரணமடைந்ததாகக் கூறப்படுகிறது. இவர் சினிமாவில் ஹீரோ ஆக வேண்டும் என்ற கனவோடு உள்ளே வந்து அது நிறைவேறாமல் போனதால் தன்னுடைய மகனை நடிகனாக்கினாராம். டான்ஸ் கிங் என்று பெயரெடுத்தவர் இவர்.

இவர், தான் ஆசைப்பட்ட படி, ஹீரோவாக நடிக்காவிட்டாலும், கில்லியில் திரிஷாவிற்கு தந்தையாகவும், திருப்பாச்சியில் விஜய்க்கு தந்தையாகவும் நடித்து தன்னுடைய நடிக்கும் ஆசையை நிறைவேற்றிக்கொண்டார். 

actor vikram father death

இவரது மறைவுக்கு வருத்தம் தெரிவித்த திரையுலகினர், தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.  இவரது இறுதிச் சடங்கு நாளை மாலை நடக்க இருக்கிறது. இறுதி அஞ்சலிக்காக இவரது உடல் கோடம்பாக்கத்தில் உள்ள மகாலிங்கபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios