கடந்த பிப்ரவரி மாதம் 7ம் தேதி வெளியாகி கேரளாவில் சூப்பர் ஹிட்டான திரைப்படம் “அய்யப்பனும் கோஷியும்”. பிருத்விராஜ், பிஜுமேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த “அய்யப்பனும் கோஷியும்” திரைப்படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாகவும் மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இந்த படத்தின் இயக்குநரான சச்சி கடந்த 18ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இந்த சோகத்தை விட அனைவரது மனதையும் உருக்கிய சம்பவம், அவருடைய அய்யப்பனும் கோஷியும் திரைப்படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்படவிருந்ததை அவர்கள் பார்க்காமல் போனது தான். 

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் அய்யப்பனும் கோஷியும் படத்தை ரீமேக் செய்ய போட்டா போட்டி நடந்து. தமிழ் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் வாங்கியுள்ளார்.இன்னும் நடிகர்கள் தேர்வு உறுதி செய்யப்படாத நிலையில், முன்னாள் ராணுவ வீரர் மற்றும் போலீஸ் அதிகாரி ஆகியோர் இடையே நடக்கும் மோதலை மையமாக கொண்ட இந்த கதையில், பிருத்விராஜ் கதாபாத்திரத்தில் சிம்புவும், பிஜு மேனன் கதாபாத்திரத்தில் பார்த்திபனும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

 

இதையும் படிங்க:  டீப் நெக் ஓபனில் கவர்ச்சி அதிர்ச்சி... வைரலாகும் யாஷிகா ஆனந்தின் ஓவர் தாராளம்...!

இதேபோல் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ள அய்யப்பனும் கோஷியும் படத்தில் பவன் கல்யாண் - விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.  இதில் பிஜு மேனன் கதாபாத்திரத்தில் பவன் கல்யாணும், பிருத்விராஜ் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஹீரோ, வில்லன், கெஸ்ட் ரோல் என பல விதமாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. அடுத்து அவர் தளபதி விஜய்க்கு வில்லனாக மாஸ்டர் படத்தில் நடித்து உள்ளார். விஜய் சேதுபதிக்கு தெலுங்கில் பெரிய மார்க்கெட் இருக்கிறது. அதனால் அடுத்தடுத்து அங்கு பல படங்களில் தனது கேரக்டருக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடித்து வருகிறார்.