திருமுருகனின் ‘மெட்டி ஒலி’ ‘கோலங்கள்’ தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பிரபலமாகி, நாசர், பரத் நடிப்பில் வெளிவந்த ‘எம்[டன்] மகன்’ சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ உட்பட்ட சில திரைப்படங்களிலும் நடித்த  நடிகர் விஜய்ராஜ் இன்று காலை தனது சொந்த ஊரான பழனியில் மாரடைப்பு காரணமாக காலமானார்.

திருமுருகனின் ‘மெட்டி ஒலி’ ‘கோலங்கள்’ தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பிரபலமாகி, நாசர், பரத் நடிப்பில் வெளிவந்த ‘எம்[டன்] மகன்’ சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ உட்பட்ட சில திரைப்படங்களிலும் நடித்த நடிகர் விஜய்ராஜ் இன்று காலை தனது சொந்த ஊரான பழனியில் மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 43. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சில தொடர்களில் வசன உதவியாளராகவும், உதவி இயக்குநராகவும் பணிபுரிந்த விஜய் ராஜ் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இயக்குநர் கவிதாபாரதி இயக்கியிருந்த ‘எம்.ஜி.ஆர்- எம்.ஆர்.ராதா’ குறித்த ஆவணப்படத்தில் அண்ணா வேடத்தில் நடித்து அவரது குரலிலும் பேசியிருந்தார். 

இரு தினங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான பழனிக்கு தனது மனைவி, குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடுவதற்காக சென்றிருந்த விஜய்ராஜ் எதிர்பாராதவிதமாக மாரடைப்பால் காலமானார்.