தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவரான நடிகர் விஜய குமார் தன்னுடைய மகள் மீது மதுரவாயால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள் நடிகை வனிதா. பிரபல டி.வி. நடிகர் ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன்மற்றும் ஒரு மகள் உள்ளனர். சில ஆண்டுகள் மட்டுமே சேர்ந்து வாழந்த இவர்கள் பின் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

பின்னர் வனிதா ஆந்திராவை சேர்ந்த தொழில் அதிபர் ஆனந்தராஜ் என்பவரை மணந்தார். இவர்களுக்கு 8 வயதில் மகள் உள்ளார்.

ஆனால், இந்த திருமண வாழ்க்கையும் நீடிக்காமல் அவரிடமிருந்து 2012-ம் ஆண்டு வனிதா விவாகரத்து பெற்றார். தற்போது ஆகாஷிடம் இரு குழந்தைகளும் ஆனந்தராஜிடம் ஒரு குழந்தையும் பராமரிப்பில் உள்ளது.

இதையடுத்து வனிதா, நடிகை அல்போன்சாவின் சகோதரர், ராபர்ட் என்பவருடன் காதல் வயப்பட்டு மணந்தார். ராபர்ட்டை நடிகராக அறிமுகம் செய்து “எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல், ரசிகர் மன்றம்“ என்ற படத்தை தயாரித்து இயக்கினார். பின்னர் இருவரும் பிரிந்துவிட்டதாகவும், தங்களுக்குள் நட்பு ரீதியாக மட்டுமே பழகி வந்ததாக ராபட் தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது வனிதா, அவருடைய தந்தை விஜயகுமாருக்கு சொந்தமாக மதுரவாயிலில் உள்ள வீட்டில் தனிமையில் வசித்து வருகிறார். ஏற்கனவே விஜயகுமாருக்கு அவருடை மகள், வனிதாவுக்கு கருத்து வேறுபாடு இருந்து வந்த நிலையில், தற்போது விஜயகுமார் வனிதா தன்னுடைய வீட்டில் இருந்து கொண்டு காலி செய்ய மறுப்பதாக கூறி மதுரவாயில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மகள் மீது தந்தை புகார் கொடுத்துள்ளது தமிழ் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.