விஜய் தளபதி என்றால் அவரது மனைவி சங்கீதாவுக்கு முடிசூடா தளபதி என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது , தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் ,  தன்னுடைய நடிப்பு ,நடனம், கடின உழைப்பால் ,  திறமையால் தனக்கென கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள விஜய்,  அவர்களின்  மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம். விஜய்க்கு  இளைஞர்கள் மத்தியில்  தனி இடம் உண்டு என்றால் அது மிகையல்ல. 

வருஷத்துக்கு ஒரு படம் என்றாலும் கூட அதற்காக அவரது ரசிகர்கள் தவமாய் தவமிருந்து காத்திருந்து அவரின் படங்களுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.   ரசிகர்கள் விஜய்க்கு தளபதி என பட்டம் கொடுத்துள்ள நிலையில் அவரின் வெற்றிக்கு உறுதுணையாக உள்ள அவரது மனைவிக்கு முடிசூடா தளபதி என பட்டம் தற்போது கிடைத்துள்ளது.  1999 ஆம் ஆண்டு விஜய் சங்கீதா  திருமணம் நடைபெற்றது  அவர்களுக்கு சஞ்சய் ஜோசன் என்ற மகனும் , திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர் எப்போதுமே ஊடகங்களுக்கு தலை காட்டாத அவரது மனைவி சங்கீதா திரைப்பட விழாக்களில் விஜய் கலந்து கொள்ளும்போது மட்டும் அவருடன் கலந்துகொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். 

இந்நிலையில் கலர்ஸ் தமிழ் . காம் இணைந்து நடத்திய வொண்டர் வுமன் என்ற விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டார் சங்கீதா ,  அப்போது நடிகர் விஜய்யும் அவருடன் கலந்து கொண்டார் ,  அப்போது சங்கீதாவுக்கு முடிசூடா தளபதி என்ற விருது வழங்கப்பட்டது,  நடிகை சிம்ரன் சங்கீதாவுக்கு அந்த விருதை வழங்கினார்,   தனக்கு விருது வழங்கியதற்கும், வழங்கிய பாராட்டுக்கும் நன்றி என சங்கீதா அப்போது தெரிவித்தார்.